ஹரிஷ் கல்யாணின் ட்விட்டர் பதிவு ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம், தான் ப்ரியா பவானி சங்கருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இறுதியாக எங்களுக்கு மகிழ்ச்சி என்றும் அதனுடனேயே இரண்டு ஹார்ட்டின்களையும் சேர்த்து காதல் ட்வீட் பதிவு செய்த்து தான்.
ஹரிஷ் கல்யாணின் இந்த ட்வீட்டுக்கு கமெண்ட் அடித்த ப்ரியா பவானி சங்கர், லாக்டவுன் முடியும் வரை காத்திருக்க முடியாதா? நான் தான் இதனை முதலில் பொதுவெளியில் சொல்லவேண்டும் என்று விரும்பினேன்..’ என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு அடுத்தடுத்து பதிலளித்திருக்கும் ஹரிஷ் கல்யாண், “காத்திருக்க முடியாது. காத்திருக்க மாட்டேன். நான் இதனை அதிகாரப்பூர்வமாக்குகிறேன். நாளை மாலை 5 மணிக்கு” என்று பதிலளித்துள்ளார்.
ஹரிஷ் கல்யாண் - ப்ரியா பவானி சங்கர் இணைந்து ‘பெல்லி சூப்புலு’தமிழ் ரீமேக்கில் நடித்து வருகின்றனர். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ரீத்து வர்மா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற இந்தப் படத்தை தமிழில் ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் விளம்பரத்துக்காகவே ஹரிஷ் கல்யாண் இப்படி ட்வீட் செய்திருப்பதாக தெரிகிறது. எனவே நாளை மாலை ‘பெல்லி சூப்புலு’ படம் குறித்த முக்கியமான அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருக்கிறது.
Finally,
Happy for US ❤️❤️ @priya_Bshankar #HarishHeartsPriya#LoveIsInTheAir pic.twitter.com/vcW6syw4Nx
— Harish Kalyan (@iamharishkalyan) September 29, 2020
ஆனால் ட்வீட்டைப் பார்க்கும் நெட்டிசன்கள் ஹரிஷ் கல்யாண் - ப்ரியா பவானி சங்கர் இருவரும் தங்களது காதலை வெளி உலகுக்கு அறிவித்துவிட்டார்களா? என்னடா நடக்குது இங்க என்று கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள். நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருப்பதைப் போல ப்ரியா பவானி சங்கருக்கும் ஆண் ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.