முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தோனி தயாரிக்கும் முதல் படத்தில் ஹீரோயினாக பிரியங்கா மோகன்... ஹீரோ யார் தெரியுமா?

தோனி தயாரிக்கும் முதல் படத்தில் ஹீரோயினாக பிரியங்கா மோகன்... ஹீரோ யார் தெரியுமா?

நடிகை பிரியங்கா மோகன்

நடிகை பிரியங்கா மோகன்

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து, எம்.எஸ்.தோனியின் சினிமா பயணத்தை தொடங்கி வைக்கும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கிரிக்கெட் வீரர் தோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண் - பிரியங்கா மோகன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கிரிக்கெட் உலகில் அறிமுகமே தேவையில்லாத இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, சினிமாவில் தயாரிப்பாளராக அடியெடுத்து வைக்கிறார். சினிமாவில் தனது அறிமுகத்தை தமிழில் இருந்து தொடங்கும் தோனி, ரமேஷ் தமிழ்மணி இயக்கும் படத்தைத் தயாரிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பார்கள் என்று சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்கவிருப்பதாகவும், ஹீரோயினாக நடிக்க பிரியங்கா மோகனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் நடிக்க ஆர்வம் காட்டியிருக்கும் அவர், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவுடன் படப்பிடிப்பு துவங்கும் எனத் தெரிகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து, எம்.எஸ்.தோனியின் சினிமா பயணத்தை தொடங்கி வைக்கும். இசையமைப்பாளர் மற்றும் இதர நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் விவரம் படத்தின் பூஜையில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

த பாஸ் ரிட்டர்ன்ஸ்... விஜய்யின் வாரிசு ஹெச்.டி ஸ்டில்ஸ்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹரிஷ் கல்யாண் சமீபத்தில் தனது நிச்சயதார்த்தத்தை அறிவித்தார். மேலும் நர்மதா உதயகுமாரை அக்டோபர் 28 ஆம் தேதியான இன்று நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்துக் கொள்கிறார்.

மறுபுறம், பிரியங்கா மோகன் ஜெயம் ரவியுடன், இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

First published:

Tags: Actor Harish kalyan, Dhoni, MS Dhoni, Priyanka Mohan