நெஞ்சுக்கு நீதி படத்தின் வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.
அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. இந்த திரைப்படத்திற்கு தமிழரசன் பச்சமுத்து என்பவர் வசனம் எழுதியிருந்தார். அதேபோல் இவர் கனா திரைப்படத்திற்கும் உதவி வசனகர்த்தாவாக பணியாற்றி இருந்தார். இந்தப் படங்களின் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தன.
இந்த நிலையில் தமிழரசன் பச்சமுத்து தற்போது 'லப்பர் பந்து' என்ற திரைப்படத்தை இயக்குகிறார். அந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். அதேபோல் சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி இணைய தொடரில் நடித்து பிரபலமான சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இந்த திரைப்படத்தில் நாயகிகளா நடிக்கிறார்கள். காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்ஷ்மண் குமார் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளார்.
கிராமத்து பின்னணியில் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படவுள்ளது. அதேபோல ஷான் ரோல்டன் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். இதற்கான பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.
லப்பர் பந்து திரைப்படத்திற்கு முதலில் ஜப்பான் என தலைப்பு வைக்க ஆலோசித்தனர். ஆனால் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ஜப்பான் என்ற தலைப்பை அறிவித்துவிட்டனர். இதன் காரணமாக படத்திற்கு லப்பர் பந்து என பெயர் வைத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.