பிரகாஷ்ராஜை கழற்றிவிட்டு சமுத்திரகனியை ஒப்பந்தம் செய்த ஹரி!

அருண் விஜய், சமுத்திரகனி மற்றும் ஹரி

ஹரி முன்னணி நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கியிருந்தாலும் தனது மனைவியின் அண்ணன் அருண் விஜய்யை வைத்து இப்போதுதான் முதல் படத்தை இயக்குகிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஹரி இயக்கத்தில் அருண் விஜயகுமார் நடித்து வருகிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தற்காலிகமாக அருண் விஜய் 33 என அழைக்கிறார்கள். ஆம், இது அருண் விஜய்யின் 33 வது படம்.

கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் இதன் படப்பிடிப்பை ராமேஸ்வரத்தில் தொடங்கினார் ஹரி. ராமேஸ்வரம், தூத்துக்குடி போன்ற கடலோர பகுதிகளிலும், அதைச்சுற்றியுள்ள இடங்களிலும் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ராதிகா சரத்குமார், யோகி பாபு போன்ற முன்னணி நட்சத்திரங்கள் உடன் நடிக்கின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் படத்தில் அருண் விஜய்யின் அண்ணன் கதாபாத்திரம் ஒன்று முக்கியமாக வருகிறது. இதில் நடிக்க பிரகாஷ்ராஜை ஒப்பந்தம் செய்திருந்தனர். அவரது கால்ஷீட் சரியான நேரத்தில் கிடைக்காததால் அவருக்குப் பதில் சமுத்திரகனியை வைத்து சம்பந்தப்பட்ட காட்சியை ஹரி படமாக்கினார்



Also read... கேஜிஎஃப் சேப்டர் 2 உடன் மோதும் லாரன்சின் ருத்ரன்!

ஹரி முன்னணி நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கியிருந்தாலும் தனது மனைவியின் அண்ணன் அருண் விஜய்யை வைத்து இப்போதுதான் முதல் படத்தை இயக்குகிறார். ஹரியின் ஆக்ஷன் கதைக்கேற்ற இமேஜ் அருண் விஜய்க்கு தற்போது அமைந்திருப்பதே காரணம்.

இந்தப் படத்தில் ப்ரியா பவானி சங்கர் அருண் விஜய்யின் ஜோடியாக நடித்து வருகிறார்விரைவாக படத்தை முடித்து இந்த வருடமே படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published: