தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கும் ஹர்பஜன்சிங்!

news18
Updated: September 10, 2019, 7:10 PM IST
தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கும் ஹர்பஜன்சிங்!
ஹர்பஜன் சிங்
news18
Updated: September 10, 2019, 7:10 PM IST
ஐபிஎல் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகளுக்காக தமிழில் ட்வீட் செய்து அசத்தி வந்த கிரிக்கெட் வீரர் தமிழ் சினிமா பக்கம் திரும்பியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரரும், தீவிர ரசிகர்களைக் கொண்ட சிஎஸ்கே அணியின் வீரருமான ஹர்பஜன் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் ட்வீட்களைப் பதிவு செய்வார். அதை அவருடைய தீவிர ரசிகரான சரவணன் பாண்டியன் அட்மினாக இருந்து கவனித்து வருகிறார்.

சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்த ஹர்பஜன் சிங், “என் மூலமாக தமிழ் சினிமா விளம்பரங்கள், ஒப்பந்தங்கள், வியாபாரம், சமூக வலைதள விளம்பரங்கள் செய்ய விரும்பினால் தொடர்புக்கு அணுகவும்- என் அன்பு தம்பி சின்னாளப்பட்டி சரவணன் பாண்டியன்” என்று கூறி அவரது தொடர்பு எண்ணையும் பதிவிட்டிருந்தார்.


இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஹர்பஜன் சிங் வெளியிடுகிறார். இதற்கான அறிவிப்பை நடிகர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இதன் மூலம் முதன் முறையாக சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார் ஹர்பஜன்.

ரம்யா பாண்டியனின் கேன்டிட் போட்டோஸை பார்க்க கிளிக் செய்யவும்

வீடியோ பார்க்க: கதை அமைந்தால் அஜித் போல நடிப்பேன்: ஜி.வி. பிரகாஷ்

First published: September 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...