தமிழ்ப் படங்களுக்கு விளம்பரம் செய்ய வேண்டுமா?... ஹர்பஜன் சிங் அதிரடி

ஹர்பஜன் சிங்கின் இந்த ட்வீட்டை அடுத்து அவரது ட்விட்டர் கணக்கில் இனி பட விளம்பரங்களும் இடம்பெறும் எனத் தெரிகிறது.

news18
Updated: August 3, 2019, 4:42 PM IST
தமிழ்ப் படங்களுக்கு விளம்பரம் செய்ய வேண்டுமா?... ஹர்பஜன் சிங் அதிரடி
ஹர்பஜன் சிங். (CSK)
news18
Updated: August 3, 2019, 4:42 PM IST
சமூக வலைதளங்களில் தமிழ்ப் படங்களுக்கு விளம்பரம் செய்வது குறித்த புதிய அறிவிப்பை கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரரும், தீவிர ரசிகர்களைக் கொண்ட சிஎஸ்கே அணியின் வீரருமான ஹர்பஜன் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் ட்வீட்களை பதிவு செய்வார். அதை அவருடைய தீவிர ரசிகரான சரவணன் பாண்டியன் அட்மினாக இருந்து கவனித்து வருகிறார்.

இந்நிலையில் பட விளம்பரம் குறித்து தமிழில் ட்வீட் பதிவிட்டிருக்கும் ஹர்பஜன் சிங், “என் மூலமாக தமிழ் சினிமா விளம்பரங்கள், ஒப்பந்தங்கள்,வியாபாரம், சமூக வலைதள விளம்பரங்கள் செய்ய விரும்பினால் தொடர்புக்கு அணுகவும்- என் அன்பு தம்பி சின்னாளப்பட்டி சரவணன் பாண்டியன்” என்று கூறி அவரது தொடர்பு எண்ணையும் பதிவிட்டுள்ளார்.


ஹர்பஜன் சிங்கின் இந்த ட்வீட்டை அடுத்து அவரது ட்விட்டர் கணக்கில் இனி பட விளம்பரங்களும் இடம்பெறும் எனத் தெரிகிறது. ட்விட்டரில் ஹர்பஜன் சிங்கை 1 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.வீடியோ பார்க்க: வேல்...வேல்... வடிவேல்!

First published: August 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...