முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று வீட்டில் தேசியக் கொடி ஏற்றிய மோகன் லால்…

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று வீட்டில் தேசியக் கொடி ஏற்றிய மோகன் லால்…

நடிகர் மோகன் லால்

நடிகர் மோகன் லால்

நேற்று கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது வீட்டில் தேசிய கொடியை ஏற்றினார். இந்த வீடியோ வைரலாகியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று நடிகர் மோகன் லால் தனது வீட்டில் தேசியக்கொடியை ஏற்றியுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதை கொண்டாடும் வகையில் ஒவ்வொருவர் வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இதன் அடிப்படையில் பல்வேறு தரப்பினர் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர். நடிகர்களில் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டோர் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றியுள்ளனர்.

ஆகஸ்ட் 15 அன்று ஒவ்வோர் வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றுவோம்… ரஜினிகாந்த் அழைப்பு

அவர்களைப் போன்று திரை பிரபலங்களும்  கொடியை ஏற்றி வருகிறார்கள். நேற்று கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது வீட்டில் தேசிய கொடியை ஏற்றினார். இந்த வீடியோ வைரலாகியது.

இந்த நிலையில் நடிகர் மோகன்லால் கொச்சியில் உள்ள தனது வீட்டில் நேற்று தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று எனது வீட்டில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளேன். ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். இவ்வாறு தேசியக் கொடியை ஏற்றுவது நம்முடைய நாட்டுப்பற்றை அதிகரிக்கச் செய்யும்’ என்று கூறியுள்ளார்.

முன்னதாக இந்திய குடிமக்கள் அனைவரும் தேசியக் கொடியை ஏற்றும் உரிமை வழங்கப்படவில்லை. 2004 ஜனவரி 23-ம் தேதி வெளிவந்த உச்ச நீதிமன்ற உத்தரவு தேசியக் கொடியை பறக்க விடுவது, அதன் கண்ணியம் காப்பது என்பது குடிமக்களின் அடிப்படை உரிமை என்று கூறியுள்ளது.

First published:

Tags: Independence day, Mohanlal