நாளைய தீர்ப்பு முதல் சர்கார் வரை விஜய் பேசிய அரசியல்!

Actor Vijay BirthDay | ஆளப்போறான் தமிழன்' என்பது விஜய் நடித்த திரைப்பட பாட்டு மட்டுமில்லை. அது அவருடைய விருப்பமும் கூட. அது நிறைவேறுமா என்ற கேள்விக்கு விடைகாண இன்னும் நெடுங்காலம் காத்திருக்க வேண்டும்.

Web Desk | news18
Updated: June 22, 2019, 8:30 AM IST
நாளைய தீர்ப்பு முதல் சர்கார் வரை விஜய் பேசிய அரசியல்!
Actor Vijay BirthDay | ஆளப்போறான் தமிழன்' என்பது விஜய் நடித்த திரைப்பட பாட்டு மட்டுமில்லை. அது அவருடைய விருப்பமும் கூட. அது நிறைவேறுமா என்ற கேள்விக்கு விடைகாண இன்னும் நெடுங்காலம் காத்திருக்க வேண்டும்.
Web Desk | news18
Updated: June 22, 2019, 8:30 AM IST
தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் விஜய்யின் பெயர் அரசியல் களத்திலும் அவ்வப்போது அடிப்படுவது வழக்கம். நாளைய தீர்ப்பு படத்தில் தொடங்கி சர்கார் வரை திரையிலும் பொது வாழ்விலும் விஜய் பேசிய அரசியலை அலசும் ஒரு சிறப்புத் தொகுப்பை பார்க்கலாம்.

விஜய் திரையில் அரசியல் பேசுவது இன்றோ நேற்றோ தொடங்கியது அல்ல. அவர் அறிமுகமான முதல் படத்திலேயே சமூக அவலங்களை எதிர்க்கும் கல்லூரி மாணவனாகதான் அறிமுகமானார். ஆனால் அப்படி அவர் நடித்த படங்கள் அவருக்கு கைக்கொடுக்காமல் போக, பின்னர் காதல் படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார்.ஈழப்போரின் போது விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதம்:

அதன்பின் கில்லி, திருப்பாச்சி, போக்கிரி என தொடர் வெற்றிகளை கொடுத்து தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத வசூல் சக்ரவர்த்தியாகவும் அதிக ரசிகர் படை கொண்ட நாயகனாக விஜய் உருவெடுத்தார்.

அப்படியான தருணத்தில்தான் ஈழத்தில் போர் உச்சம்பெற்றது. அப்போது விஜய் நற்பனி இயக்கம் சார்பாக தமிழகத்தில் 37 இடங்களில் அவருடைய ரசிகர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இது விஜய்யின் அரசியல் எண்ட்ரிக்கான அடித்தளம் என்றே பேசப்பட்டது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக 2009-ம் ஆண்டு தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றிய விஜய் அதன் மூலம் பல நலத்திட்ட உதவிகளையும் செய்யத் தொடங்கினார்.
Loading...


டெல்லியில் ராகுலுடன் விஜய் சந்திப்பு

டெல்லிக்கு சென்று ராகுல் காந்தியை விஜய் சந்தித்து திரும்பியதும் காங்கிரஸுடன் அவர் கூட்டணி அமைக்க போகிறார் என்ற செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக பத்திரிகையாளர்களை சந்தித்த விஜய், "இப்போதைக்கு எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை.தமிழர்களுக்கு நல்லது நடக்கும் என்றால் பிற்காலத்தில் களத்தில் இறங்கி பாடுபடுவேன்" என்று வெளிப்படையாக பேசினார்.

ராகுல்-விஜய் சந்திப்புக்கு திமுக எதிர்ப்பு?

விஜய், ராகுல் காந்தி சந்திப்பு அன்றைய ஆளுங்கட்சியான திமுக-வுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. அதுவரை விஜய்யுடன் நட்பு பாராட்டி வந்த திமுக, காவலன் சமயத்தில் விஜய்க்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. அரசியல் ரீதியாக அவர் சந்தித்த முதல் நெருக்கடி அதுதான்.

தமிழகம் வந்த மோடியுடன் விஜய் சந்திப்பு

திமுக-வுடன் ஏற்பட்ட இந்த மோதல் 2011-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக-வுக்கான ஆதரவு நிலையாக மாறியது. ஆனால் தலைவா ரிலீஸ் சமயத்தில் இந்த பிம்பமும் சுக்குநூறாக உடைந்தது. விஜய் மீதான அதிருப்தியால் 'தலைவா' படம் வெளியானால் சட்ட ஒழுங்கு கெட்டுவிடும் என இப்படத்தை வெளியிட தடை விதித்தது அன்றைய அதிமுக அரசு.

பிரதமர் மோடி, விஜய் சந்திப்பு


திமுக, அதிமுக என தமிழகத்தின் இரு மாபெரும் கட்சிகளோடும் பகைமை ஏற்பட்டதால் அடுத்தடுத்த அரசியல் நடவடிக்கைகளில் விஜய் நிதானம் காட்டத் தொடங்கினார். இடையில் தமிழகம் வந்திருந்த மோடியை சந்தித்து பேசினார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு விஜய் விமர்சனம்

பா.ஜ.க அரசு, பணமதிப்பிழப்பு திட்டத்தை அறிவித்த போது அதை விமர்சனம் செய்தார். அதேபோல ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு நிலை எடுத்து வீடியோ வெளியிட்டார். அதன்பின் வெளியான மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி திட்டத்தைப் பற்றிய விமர்சன வசனங்கள் இடம் பெற்று பா.ஜ.க. தரப்பினர் கடுமையான எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

இதன் உச்சமாக சர்கார் இசை வெளியீட்டு விழாவில் தனது அரசியல் பிரவேசம் குறித்த பல கருத்துகளை வெளிப்படையாகவே விஜய் முன்வைத்தார்.

விஜய்


விஜய்யின் வருங்கால அரசியல் பேசிய சர்கார்

சர்கார் படமும் இளைஞர்களுடன் இணைந்து ஆட்சியை கவிழ்ப்பது, தேர்தலில் வெற்றிபெற்று புது ஆட்சி அமைப்பது என விஜய்யின் வருங்கால அரசியல் பயணத்திற்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.

'ஆளப்போறான் தமிழன்' என்பது விஜய் நடித்த திரைப்பட பாட்டு மட்டுமில்லை. அது அவருடைய விருப்பமும் கூட. அது நிறைவேறுமா என்ற கேள்விக்கு விடைகாண இன்னும் நெடுங்காலம் காத்திருக்க வேண்டும்.

Also see... தளபதி சர்கார்- விஜய்யின் புரட்சிகரமான திரைபடங்கள்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...