த்ரிஷாவை நாம் முதலில் பெரிய திரையில் பார்க்கவில்லை. நம்புவதற்கு கடினமாக இருந்தாலும், த்ரிஷா முதன்முதலில் நடித்தது டிவி-யில் வெளியான குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து விளம்பரம். அப்போது அவர் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வருவார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். நையாண்டி தர்பார் என்ற நிகழ்ச்சியில், தான் மாடலிங்கில் முழுமையாக கவனம் செலுத்தவிருப்பதாகவும், நடிப்புத் தொழிலைத் தொடர தனக்கு விருப்பமில்லை என்றும் கூறியிருந்தார் த்ரிஷா. அதிர்ஷ்டவசமாக, அவர் அப்படி செய்யவில்லை. இல்லையேல் திரையுலகிற்கு பெரும் இழப்பாக இருந்திருக்கும்.
த்ரிஷாவின் 39-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் சிறந்த தமிழ் படங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.
சாமி

சாமி த்ரிஷா
ஹரி இயக்கிய இந்த படத்தில்
த்ரிஷா மிகவும் பழமைவாதம் மாறாத, பாரம்பரியமிக்க குடும்பத்து பெண்ணாக நடித்திருந்தார் த்ரிஷா. அந்தக் காலத்தின் பெரும்பாலான படங்களைப் போலல்லாமல், பழமைவாத கண்ணோட்டத்தில் இருந்து ஒரு இஞ்ச் கூட நகராத குடும்பத்தைச் சேர்ந்தாலும், வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை காதலிக்கத் துணிகிறார் ஹீரோயின் த்ரிஷா.ஹீரோவின் பயண திசையை மாற்றுவதற்கான முக்கிய காரணங்களில் ஒருவராகவும் மாறினார். பிற்காலத்தில் த்ரிஷா நடித்த மற்ற பெண் கதாபாத்திரங்கள் சாமி த்ரிஷாவை விட வலுவாக இருக்கலாம். ஆனால் இந்த படத்தின் வெற்றி, அவருக்கு வெற்றிகரமான பாதையை காட்டியது.
கில்லி
தெலுங்கில் வெற்றி பெற்ற ஒக்கடு படத்தின் ரீமேக் இது. துன்பத்தில் இருக்கும் தனக்காக போராடும் ஒருவனை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் த்ரிஷா. சொன்னதைக் கடைப்பிடிக்கும் பெண்ணாக, சுயமாக முடிவெடுத்து, பின் விளைவுகளைச் சமாளிக்கும் சுதந்திரப் பெண்ணாக நடித்திருந்தார். விஜய்யுடனான அவரது திரை கெமிஸ்ட்ரி அந்த நேரத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்தி நல்ல மொழி... இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள்... நாம் அதை கற்றுக் கொள்ள வேண்டும் - சுஹாசினி மணிரத்னம்
உனக்கும் எனக்கும்
மீண்டும், த்ரிஷா நடித்த கிராமத்து பெண் கதாபாத்திரம். தன் சகோதரியின் விருப்பத்தை நிறைவேற்ற வானத்தையும் பூமியையும் நகர்த்தத் தயாராக இருக்கும் ஒரு அண்ணன். ஆனால், விஷயம் என்னவென்றால், தன் தங்கை திருமணம் செய்ய விரும்பும் அவள் காதலனை அண்ணன் ஏற்கவில்லை. முழுக்க முழுக்க த்ரிஷாவின் கதாபாத்திரம் தான் இந்தப் படத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கும்.
அபியும் நானும்
இந்த சமூகம் வரையறுத்து வைத்திருக்கும் நல்ல பெண் என்ற விஷயங்களை துறந்து, தனக்கு பிடித்தது போல் வாழும் நவீன பெண்ணாக த்ரிஷா நடித்த முதல் படம் இது. பிரகாஷ் ராஜ் நடித்த அழகான அப்பாவின் கதை. தனது மகள் வளர்ந்துவிட்டாள், அவளே தன் சொந்த முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டவளாக இருக்கிறாள் என்ற உண்மையைப் புரிந்துகொள்ள போராடும் தந்தையின் பயணம்.
கண் தானம் செய்த 96, பிகில் பட நடிகை வர்ஷா! குவியும் வாழ்த்துகள்...
விண்ணைத்தாண்டி வருவாயா
தமிழ் சினிமா வரலாற்றில், எல்லா காலத்திலும் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக வரலாற்றில் இடம்பெறும், தலைசிறந்த படைப்பு இது. இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு மேஜிக். இயக்குனர் கவுதம் மேனன் இதை இந்தியில் ஏக் தீவானா தா என்ற பெயரில் ரீமேக் செய்ய எடுத்துக் கொண்ட முயற்சியில் தோல்வியை தழுவினார். தன்னுள் ஆழ்ந்த ரகசியங்கள் மற்றும் அடக்கப்பட்ட ஆசைகளுடன் ஒரு ஒர்க்கிங் உமனாக பார்வையளர்களை கவர்ந்தார் த்ரிஷா. ஜெஸ்ஸி சரியான காதலியோ அல்லது கீழ்ப்படிதலுள்ள மகளோ இல்லை. சில சமயங்களில் சில கடுமையான முடிவுகளை எடுக்கும் போது, தனக்கு சரியென படுவதை டிக் செய்பவள். த்ரிஷாவின் திரை வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான படம்.
என்னை அறிந்தால்
கௌதம் மேனன் இயக்கிய இந்தப் படத்தில் த்ரிஷா அழகாக இருந்தார். அவர் அஜித் நடித்த ஹீரோ கதாபாத்திரத்தை விட முற்போக்கான ஒற்றை அம்மாவாக சிறப்பாக நடித்திருந்தார். சமூகத்தின் வதந்திகள் மற்றும் தீர்ப்புகளில் இருந்து அவரை திருமணம் செய்துக் கொள்ள முன்வந்த அஜித்தின் கோரிக்கையை நிராகரித்தார். பின்னர் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறிய பின் மட்டுமே ஹீரோவுக்கு ஓகே சொன்ன ரியாலிட்டியான கதாபாத்திரம்.
96
த்ரிஷா நடித்த எளிய காதல் கடிதம் என்றே 96 படத்தை சொல்லலாம். அவர் வெறுமனே திரையில் தோன்றினாலும் பார்வையாளர்களின் கவனத்தை தன் மீது திருப்பும் வசீகர கதாபாத்திரம். தனது உண்மையான காதலுக்கும் வேறொருவருடனான திருமணத்திற்கும் இடையில் கிழிந்து போன இதயத்தின் ரணத்தை போகிற போக்கில் பார்வையாளர்களை உணரச்செய்யும் அற்புதமான கதாபாத்திரம். இந்தப் படத்தை இன்னும் எத்தனை மொழிகளில் வேண்டுமானாலும் ரீமேக் செய்யலாம், ஆனால் அத்தனையும் த்ரிஷா தந்த உணர்வை நிச்சயம் தராது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.