தமிழ் சினிமாவின் ’தளபதி’ விஜய்யின் பிறந்த நாளான இன்று அவரின் திரைப்பயணம் பற்றிய ஒரு பதிவு.
தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் 18வது வயதில் ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையில் காலடி எடுத்து வைத்தார் விஜய். செந்தூர பாண்டியன்' திரைப்படத்தில் இளைய நட்சத்திரம் விஜய்யாய் வந்து ரசிகனில் ‘பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி’ என பாடல் பாடி இளைய தளபதி ஆனார். தனது ஆரம்பகால சினிமா பயணத்தில் வழியெங்கும் பலமுறை விழுந்த விஜயை குதிரையென எழ வைத்தது விக்ரமன் இயக்கத்தில் வந்த 'பூவே உனக்காக'.. 'மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம் கூட சுகமாகும், வாழ்க்கை இன்ப வரமாகும்' என காதல் ராகம் படித்த விஜய்யை தமிழக மக்கள் தங்கள் வீட்டு பிள்ளையாக்கினர்.
பீஸ்ட் சாதனையை முறியடிக்குமா வாரிசு ஃபர்ஸ்ட் லுக்? புயல் வேகத்தில் லைக் – ரீ ட்வீட்
பூவே உனக்காக திரைப்படத்தின் வெற்றியை ‘காதலுக்கு மறியாதை’ திரைப்படத்தில் தக்க வைத்தார் விஜய். 'காதல், காமெடி, குடும்பம் தாண்டிய கதைகள் விஜய்க்கு செட் ஆகாது' என பேசப்பட்ட தருணத்தில். தனது தோற்றம், உடை, பேச்சு, சூழல் ஏன் படத்தின் கலர் வரை அனைத்திலும் அதுவரை விஜய் நடித்த படங்களிலிருந்து மாறுபட்டு வந்த 'திருமலை' விஜயை தீப்பொறி திருமலையாக்கி அனல் தெறிக்க வைத்தது. அந்த அனலை கனலாக்கி விஜய்க்கு ஒரு முழுமையான ஸ்டார் அந்தஸ்தை கொடுத்தது ‘கில்லி’ திரைப்படம்.
`அழகிய தமிழ்மகன்', `குருவி', `வில்லு' `சுறா' என தொடர்ந்து தோல்வியைச் சந்தித்த விஜய்க்கு, அடுத்த திரைப்படமான `காவலன்' பெரும் வெற்றியைப் பெற்று மீண்டும் திரை ஓட்ட களத்தில் விஜயை முன்னணியில் நிறுத்தியது.. அதுமுதல் சொல்லி அடித்த கில்லியாய் `வேலாயுதம்', `நண்பன்' என மிரட்டிய விஜய் பின் ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வந்த `துப்பாக்கி' யில் தோட்டவென வெடித்து பாக்ஸ் ஆபீஸை துவம்சம் செய்தார்.
ரெட் ஜெயன்ட் வெற்றிப் பட வரிசையில் இடம்பெறாத பீஸ்ட்… உதயநிதி மீது விஜய் ரசிகர்கள் வருத்தம்
துப்பாக்கியின் வெற்றியை தொடர்ந்து `தலைவா' வில் அரசியல் ஈடுபாட்டை சொல்லி தன் ரசிகர்களை குதூகளிக்க வைத்த விஜய் மீண்டும் முருகதாஸோடு கூட்டணி சேர்ந்து ’கத்தி’ திரைப்படத்தில் நடிப்பின் மாஸ் ஆனார். அதுவரை தயங்கியும், யோசித்தும் அரசியல் பஞ்ச்களை பேசி வந்த விஜய், கத்தி திரைப்படத்திற்கு பிறகு நேராகவே அடிக்க ஆரம்பித்தார். அந்த அடியில் முதலில் சிக்கியது ’மெர்சல்’ திரைப்படம்.’ தளபதி’ என முதன் முதலாக விஜய்க்கு டைட்டில் கார்டு போடப்பட்டு. இளைய தளபதி விஜய் தளபதி விஜயாக உருவெடுத்தார்.
’மெர்சல்’ திரைப்படத்தின் வெற்றி ‘தெறி’ திரைப்படத்தில் டபுளானது. அதுமுதல் விஜயின் திரைப்படங்கள் வெளியாகும் நாள் அவரது ரசிகர்களின் திருவிழா நாளானது. அப்படியாக அமைந்தது முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ‘சர்க்கார்’ திரைப்படம்.
விஜயின் ரசிகர்களை பிகில் அடிக்க வைத்து நாயகர்களின் மாஸ்டர் ஆக்கியது அவரின் ‘பிகில்’ மற்றும் ‘மாஸ்டர்’ திரைப்படங்கள். ஒரு பாலகனாக திரை நுழைந்து தளபதியாக உயர்ந்த விஜயை தமிழ் சினிமாவின் ’பீஸ்ட்’ என சொல்லாமல் வேறு என்ன சொல்ல..?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Thalapathy Vijay, Actor Vijay, Kollywood, Tamil Cinema