Home /News /entertainment /

Sivakarthikeyan: சிவகார்த்திகேயனுக்கு சூரி கொடுத்த பிறந்தநாள் சர்ப்ரைஸ்!

Sivakarthikeyan: சிவகார்த்திகேயனுக்கு சூரி கொடுத்த பிறந்தநாள் சர்ப்ரைஸ்!

சிவகார்த்திகேயன் - சூரி

சிவகார்த்திகேயன் - சூரி

நடிகர் சூரி, சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.

    நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் சூரி.

    விஜய் டிவி-யில் பிரபலமான கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துக் கொண்ட சிவகார்த்திகேயன், தனது நகைச்சுவை உணர்வால் எளிதில் ரசிகர்களைக் கவர்ந்தார். இதையடுத்து அதே சேனலில் தொகுப்பாளராகும் வாய்ப்பு கிடைத்தது. நாளைக்கு வரும் அதிர்ஷ்டத்தை விட இன்றைக்குக் கிடைக்கும் வாய்ப்பு மிக முக்கியம் என்பதை தனது ஒவ்வொரு நகர்விலும் உணர்ந்து செயல்பட்டவர் சிவகார்த்திகேயன்.

    பின்னர் தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குநராக அறிமுகமான 3 படத்தில் தனுஷின் நண்பராக சினிமாவிலும் அடியெடுத்து வைத்தார். பக்கத்து வீட்டு பையன் தோற்றம், இயல்பான நடிப்பு, டைமிங் வசனங்கள், கூடவே ரசிக்க வைக்கும் நகைச்சுவை உணர்வு இவையெல்லாம் சிவகார்த்திகேயனை ’நம்ம வீட்டு பிள்ளையாக’ நினைக்க வைத்தன.

    Happy Birthday Sivakarthikeyan: வெள்ளித்திரையில் வெற்றிக்கொடி நாட்டிய சின்னத்திரை பிரபலம்!

    தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறியிருக்கிறார். இந்நிலையில் இன்று அவர் தனது 37-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.



    Dhanush: மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகு மகன் யாத்ராவுடன் தனுஷ் - கவனம் பெறும் புகைப்படம்!

    இதையடுத்து நடிகர் சூரி, சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது கேக்குடன் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்து, பின்னர் கேக் வெட்டி புகைப்படங்களும் எடுத்துக் கொண்டுள்ளார். அந்தப் படங்களை ட்விட்டரில் வெளியிட்டு, என் அன்பு தம்பி செல்ல தம்பிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Soori, Sivakarthikeyan

    அடுத்த செய்தி