ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

KS Chithra: 6 முறை தேசிய விருது வென்ற ’சின்னக்குயில்’ சித்ரா பிறந்தநாள்!

KS Chithra: 6 முறை தேசிய விருது வென்ற ’சின்னக்குயில்’ சித்ரா பிறந்தநாள்!

பாடகி சித்ரா

பாடகி சித்ரா

சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை ஆறு முறை வென்றுள்ள சித்ரா, இதை அதிக முறை வென்ற பெண் பாடகர் என்ற சாதனையை இதுநாள் வரை தன்வசப்படுத்தி வைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சின்னக்குயில் என ரசிகர்களால் கொண்டாடப்படும் சித்ரா இன்று தனது 58-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் அவரது இசை பயணம் குறித்து இங்கே குறிப்பிடுகிறோம்.

நடிகைகளைப் போலவே பாடகர்களுக்கும் தமிழ் சினிமாவில் குறைவான ஆயுட்காலமே கிடைக்கிறது. தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பாடகிகள் சில ஆண்டுகளிலேயே காணாமல் போய்விடும் நிலையில், ஏறத்தாழ நான்கு தசாப்தங்களாக தன் வெற்றிக் கொடியை பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார் சித்ரா.

' isDesktop="true" id="515515" youtubeid="6yRc4Ux7pgs" category="cinema">

தன் 16 வயதிலிருந்து ஒலிக்கத் தொடங்கிய இந்த கொஞ்சும் குரல் கடந்த 40 ஆண்டுகளில் 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியும் பொலிவோடு இனித்துக்கொண்டே இருக்கிறது.

' isDesktop="true" id="515515" youtubeid="V3x9OT9HUCQ" category="cinema">

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேடை இசை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி பாட்டு போட்டிகள் என வர்த்தக ரீதியிலான இசை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் சித்ரா. கர்நாடக சங்கீதத்தில் சிறுவயது முதலே அர்ப்பணிப்புடன் பயிற்சி செய்து தன் வாழ்க்கையை இசைக்காகவே தியாகம் செய்தவர். மிகக் குறைந்த வயதிலேயே மத்திய அரசு வழங்கும் திறமைசாலிகளுக்கான கல்வி உதவித்தொகையை தொடர்ந்து ஏழு ஆண்டுகள் பெற்றவர். மிக இளம் வயதில் இசை பயில தொடங்கிய சித்ரா இசையின் மூலமே தனக்கான அடையாளங்கள் கிடைக்கச் செய்தார்.

' isDesktop="true" id="515515" youtubeid="bWlsbVfEnII" category="cinema">

கே.ஜே.யேசுதாஸ் உள்ளிட்ட இசை ஜாம்பவான்கள் உடன் பல கச்சேரிகளில் பாடிவந்த சித்ரா, மலையாள திரையுலகில் பாட தொடங்கியவுடன் சினிமா உலகிற்குள் அடியெடுத்து வைத்தார். இசையில், இளங்கலை முதுகலை என பட்டங்களும் பெற்றுள்ள சித்ரா, பூவே பூச்சூடவா திரைப்படத்தில் இடம் பிடித்த 'சின்ன குயில் பாடும் பாட்டு கேட்குதா' பாடல் மூலம் தமிழ் சினிமாவிற்கு பாடகியாக அறிமுகமானார்.

' isDesktop="true" id="515515" youtubeid="MtjKqzqwjQE" category="cinema">

சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை ஆறு முறை வென்றுள்ள சித்ரா, இதை அதிக முறை வென்ற பெண் பாடகர் என்ற சாதனையை இதுநாள் வரை தன்வசப்படுத்தி வைத்துள்ளார். மேலும் தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை நான்கு முறையும், கேரள அரசின் சிறந்த பாடகிக்கான விருதை 15 முறையும், ஆந்திர அரசின் மாநில விருதினை 6 முறையும் பெற்றுள்ள இவர், கர்நாடக அரசு வழங்கும் மாநில விருதை இரண்டு முறை பெற்றுள்ளார்.

' isDesktop="true" id="515515" youtubeid="WfwCtR1iLFw" category="cinema">

பிறந்தநாள் முதல் இசைக்காக வாழ முடிவு செய்து, நான்கு தசாப்தங்களில் தாண்டி இசையால் பல விருதுகளை வென்று நடமாடும் இசையின் வடிவாய் வாழும் சித்ரா இந்திய இசை உலகின் ஆச்சரியம்

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Shalini C
First published:

Tags: Singer Chithra, Tamil Cinema