Home /News /entertainment /

Simbu Birthday: சிரமங்களை கடந்து சிகரம் தொட்ட சிம்பு!

Simbu Birthday: சிரமங்களை கடந்து சிகரம் தொட்ட சிம்பு!

சிம்பு

சிம்பு

சிம்பு படம் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்பதை அடித்து நொறுக்கியது கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. சிம்புவை பிடிக்காமல் இருந்தவர்களும், இந்தப் படம் மூலம் அவருக்கு ரசிகர்களாக மாறினர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்துக்கொண்டே திரைக்கதை-வசனம் எழுதுதல், பாடல்களை எழுதுதல், பின்னணி பாடுதல், இசையமைத்தல், மற்ற நடிகர்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்தல் என்று பல துறைகளில் தமது திறமையை நிரூபித்திருப்பவர்களை விரல் விட்டு எண்ணலாம். அந்தப் பட்டியலில் நடிகர் சிம்பு முதன்மையானவர். அவர் இன்று தனது 39-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் எல்லோருமே ஒருநாள் ஹீரோ ஆவார்கள் என சொல்லிவிட முடியாது. அப்படி ஹீரோவாகும் நபர்கள் வெற்றி, தோல்விக்கு அப்பாற்பட்டு எப்போதும் முன்னணி நடிகராக நட்சத்திர அந்தஸ்த்தை தக்க வைத்துக் கொள்ள முடியாது. ஆனால் இதனை ஒரு மேஜிக் போல சிம்பு நிகழ்த்திக் காட்டினார்.

சிம்புவை குழந்தை நட்சத்திரமாக நினைத்தாலே ‘ஐ எம் எ லிட்டில் ஸ்டார் ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்’ என சுட்டிப் பையனாக ஆடி பாடியது கண்முன் வந்து நிற்கும். குழந்தை நட்சத்திரமாக தனது ஒரு வயதில் இருந்தே நடிக்க ஆரம்பித்த சிம்பு, கிட்டத்தட்ட 12 படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்திருக்கிறார்.

பின்னர் 'காதல் அழிவதில்லை' படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்தார் சிம்பு. படம் 2002 தீபாவளிக்கு வெளியானது. அந்த சமயம் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜயகாந்தின் 'ரமணா', ஏ.வெங்கடேஷ்-விஜய்யின் 'பகவதி', கே.எஸ்.ரவிகுமார்-அஜித்தின் 'வில்லன்' எனப் பெரிய படங்களுடன் 'காதல் அழிவதில்லை' வெளியானது. எதிர்பார்த்த அளவுக்கு படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் சிம்புவின் நடனம், துடிப்பு, வேகம், வசன உச்சரிப்பில் தனி ஸ்டைல் ரசிகர்களிடம் கவனம் பெற்றன.

Simbu Silambarasan TR Birthday Special, simbu birthday, happy birthday simbu, simbu, simbu str, simbu instagram, silambarasan tr, simbu love, சிம்பு, சிம்பு இன்ஸ்டாகிராம், நடிகர் சிம்பு படங்கள், simbu age, simbu father, simbu 50th movie, simbu wife age, simbu sister, silambarasan marriage, silambarasan age, silambarasan wife, silambarasan new movie, silambarasan instagram, silambarasan recent photos, silambarasan twitter, silambarasan height, சிம்பு, நடிகர் சிம்பு பிறந்தநாள், சிம்பு வயது, சிம்பு படங்கள்

ஆரம்பத்தில் கொஞ்சம் சறுக்கினாலும் பின்னர் ‘கோவில்’, ’குத்து’, ’மன்மதன்’ என சிம்பு எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்று தந்ததோடு, இளம் நடிகர்களிலும் முன்னணி நடிகர் எனும் அந்தஸ்தையும் அவருக்கு வழங்கியது.

தனது திரைப்பயணத்தின் பாதைகளில் சிகரங்களை தொட்ட சிம்பு, சிரமங்களையும் தொடாமலில்லை. ’தொட்டி ஜெயா’, ’காளை’, ‘சரவணா’ உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற தவறினாலும், மாஸான ஸ்க்ரீன் பிரசென்ஸ், எனர்ஜியான டான்ஸ் மூவ்மென்ட்ஸ் ஆகியவற்றால் ரசிகர்களை கவர தவறவில்லை சிம்பு.

Simbu Silambarasan TR Birthday Special, simbu birthday, happy birthday simbu, simbu, simbu str, simbu instagram, silambarasan tr, simbu love, சிம்பு, சிம்பு இன்ஸ்டாகிராம், நடிகர் சிம்பு படங்கள், simbu age, simbu father, simbu 50th movie, simbu wife age, simbu sister, silambarasan marriage, silambarasan age, silambarasan wife, silambarasan new movie, silambarasan instagram, silambarasan recent photos, silambarasan twitter, silambarasan height, சிம்பு, நடிகர் சிம்பு பிறந்தநாள், சிம்பு வயது, சிம்பு படங்கள்

பின்னர் 'வல்லவன்' படத்தின் மூலம் இயக்குநராகவும் களமிறங்கினார். பலத்த எதிர்பார்ப்புடன் வெளியான அந்தப் படம் ரசிகர்களை ஈர்க்கத் தவறியது. அதற்குப் பிறகு சிம்பு இயக்க முயன்ற 'கெட்டவன்' உள்ளிட்ட படங்கள் பலவும் இன்றுவரை கிடப்பில் போடப்பட்டுள்ளன.

சிம்பு படம் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்பதை அடித்து நொறுக்கியது கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. சிம்புவை பிடிக்காமல் இருந்தவர்களும், இந்தப் படம் மூலம் அவருக்கு ரசிகர்களாக மாறினர். அந்தப் படத்தில் அதுவரை பார்த்த வழக்கமான சிம்பு இல்லை. படத்தின் எல்லா ஃபிரேம்களிலும் இருந்த சிம்பு, திரையிலிருந்து கண்களை எடுத்துவிடாத மாதிரி, மேஜிக் நிகழ்த்திக்கொண்டிருந்தார். அதுவரை சிம்பு என்றால் ’மாஸ்’ என்றிருந்ததோடு ’க்ளாஸ்’ என்பதும் புதிதாக சேர்ந்தது. அதற்கடுத்து அவர் நடித்த வானம் படமும் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

அதையடுத்து அவர் நடித்த படங்கள் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு சிம்பு நடிப்பில் வெளியான செக்க சிவந்த வானம், அச்சம் என்பது மடமையடா படங்கள் பார்வையாளர்களை கவர்ந்தாலும், ரசிகர்களின் மனங்களை முழுதாக கொள்ளையடிக்க முடியவில்லை. ஆனால் கடந்த வருடம் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம், இத்தனை வருடம் நாம் தவறவிட்ட சிம்புவை திரையில் காட்டியது. தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகியப் படங்கள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

Simbu Silambarasan TR Birthday Special, simbu birthday, happy birthday simbu, simbu, simbu str, simbu instagram, silambarasan tr, simbu love, சிம்பு, சிம்பு இன்ஸ்டாகிராம், நடிகர் சிம்பு படங்கள், simbu age, simbu father, simbu 50th movie, simbu wife age, simbu sister, silambarasan marriage, silambarasan age, silambarasan wife, silambarasan new movie, silambarasan instagram, silambarasan recent photos, silambarasan twitter, silambarasan height, சிம்பு, நடிகர் சிம்பு பிறந்தநாள், சிம்பு வயது, சிம்பு படங்கள்

திரை வாழ்க்கையில் வெற்றியையும் தோல்வியையும் சம அளவில் பார்த்தவர் சிம்பு. ஆனால் ஒருபோதும் தனது தன்னம்பிக்கையை இழக்காமல் நதி போல ஓடிக் கொண்டிருக்கிறார். பிரச்னைகள், சர்ச்சைகள் என எல்லா சந்தர்ப்பங்களிலும் அவருடன் உறுதுணையாக இருக்கும் ரசிகர்களைப் பெற்றிருக்கிறார். சிம்பு உடல் ஆரோக்கியத்துடன் தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்க வாழ்த்துகள்!



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Simbu

அடுத்த செய்தி