• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Happy Birthday Nayanthara | லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இன்று பிறந்தநாள்..

Happy Birthday Nayanthara | லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இன்று பிறந்தநாள்..

நயன்தாரா

நயன்தாரா

Nayanthara Birthday: நடிகை நயன்தாரா இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நயன்தாரா இதுவரை கடந்து வந்த திரை வாழ்க்கை பற்றி தெரிந்துக்கொள்ளலாம். 

  • Share this:
    சினிமாவில், நடிகர்களுக்கு இணையாக நடிகைகள் உச்சம் தொடுவது அரிதான காரியம். நடிகைகள் பானுமதி, சாவித்திரி போன்ற ஒருசில ஜாம்பவான்கள் மட்டுமே சாதித்துக் காட்டியதை சமகாலத்தில் சாத்தியப்படுத்தி காட்டியவர் நடிகை நயன்தாரா.

    டயானா குரியன் ஆக திரை வாழ்க்கையை தொடங்கிய நயன்தாரா ஆரம்ப காலகட்டத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றினார். மாடலிங் துறையில் இருந்த விருப்பத்தால் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

    தொலைக்காட்சி தொகுப்பாளராக  நடிகை நயன்தாரா



    2003-ஆம் ஆண்டு மனச்சினக்கரே எனும் மலையாள திரைப்படத்தில் அறிமுகமான நயன்தாராவிற்கு 2005 ஆம் ஆண்டில் ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து சந்திரமுகியில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்த நயன்தாரா, யாரடி நீ மோகினி, பாஸ் என்கிற பாஸ்கரன், பில்லா உள்ளிட்ட வெற்றி படங்கள் மூலம் முன்னணி நாயகி அந்தஸ்தை பெற்றார்.

    எங்கேயோ பார்த்த மயக்கம் பாடல்



    தெலுங்கில் நடித்த ஸ்ரீராமராஜ்யம் திரைப்படத்தோடு, திரைத்துறையில் இருந்து விலகுவதாக அறிவித்த நயன்தாரா பிறகு முடிவை மாற்றிக்கொண்டு ராஜா ராணி, ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

    ராஜா ராணி நயன்தாரா



    மாயா திரைப்படத்தில் கதாநாயகன் இன்றி நாயகியை மட்டும் மையப்படுத்திய திரைப்படத்தில் நடித்து பலரையும் ஆச்சரியப்பட செய்தார். தொடர்ந்து அறம், கோலமாவு கோகிலா என நாயகியை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து நாயகர்களுக்கு இணையாக சினிமாவில் வசூலை ஈட்டித் தர முடியும் என நிரூபித்த நயன்தாரா, உச்ச நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரோடு தர்பார், பிகில், விசுவாசம் என வெற்றிப் படங்களில் ஜோடி சேர்ந்து தனது நட்சத்திர அந்தஸ்தை மேலும் அதிகரித்தார்.

    அறம்



    படிக்க...குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ரோஜா (புகைப்படம்)

    தமிழ் சினிமாவில் வேறு எந்த நாயகியும் பெறாத வகையில், 5 கோடி ரூபாயை சம்பளமாக பெற்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக தன்னை நிரூபித்துள்ளதோடு நெற்றிக்கண் படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார்.

    பல விமர்சனங்களையும் கடந்த நயன்தாரா, அம்மன் கதாபாத்திரம் ஏற்று நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் OTT தளத்தில் வெற்றி பெற்றதன் மூலம் திரையரங்கை தாண்டி இணையதளத்திலும் தன்னால் சாதிக்க முடியும் என நிரூபித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: