• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • HBD Shankar: தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் நிறைவேறாத ஆசை

HBD Shankar: தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் நிறைவேறாத ஆசை

இயக்குநர் ஷங்கர்

இயக்குநர் ஷங்கர்

ஷங்கரின் பிரமாண்டம் பொதுவாக அவரின் பட பாடல்களில் வெளிப்படும்

  • Share this:
    தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் ஷங்கர் இன்று தனது 58-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

    கும்பகோணத்தில் முத்து லக்ஷ்மி - சண்முகம் தம்பதிக்கு 1963-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி மகனாய் பிறந்தவர் ஷங்கர். இவர் அடிப்படையில் டிப்ளோமா மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்தவர். படித்து முடித்து திரையுலகில் நுழைவதற்கு முன், குவாலிட்டி கண்ட்ரோல் சூப்பர்வைசராக பணியாற்றி வந்திருக்கிறார். ஒருமுறை ஷங்கரும் அவரது குழுவினரும் நடத்திய நாடகத்தை தற்செயலாக கண்ட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், அவரை திரையுலகிற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

    நாடகங்களில் பணியாற்றிய ஷங்கருக்கு முதலில் நடிகராகும் ஆசை தான் இருந்திருக்கிறது. ஆனால் காலம் அவரை இந்தியாவின் தலை சிறந்த இயக்குநர்களுள் ஒருவராக அடையாளப்படுத்தியிருக்கிறது.  அதனால் நடிகராக வேண்டும் என்ற ஷங்கரின் கனவு நிறைவேறாமல் போய்விட்டது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக திகழும் ஷங்கர், முதன் முதலில் பணியாற்றியது ஒரு இந்தி சினிமாவில். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ’ஜெய் ஷிவ் ஷங்கர்’ என்ற ராஜேஷ் கண்ணா நடித்த படத்தில் தான் அவர் முதன் முதலில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஷங்கரின் பிரமாண்டம் பொதுவாக அவரின் பட பாடல்களில் வெளிப்படும். பாடலாசிரியரின் ஒரு வார்த்தைக்கும் திரையில் நியாயம் செய்ய அதிக மெனக்கெடல்களை செய்வார். சினிமா இயக்க வந்து 28 ஆண்டுகள் ஆகியும் இப்போது தான் முதன் முறையாக தெலுங்கில் ராம் சரணுடன் ஒரு படம், இந்தியில் ரன்வீர் சிங்குடன் அந்நியன் ரீமேக் என வேற்றுமொழிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.

    இதற்கிடையே கமல் நடிப்பில், ஷங்கரின் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பாதியில் நிற்கிறது. இந்த மூன்று படங்களில் முதலில் எது திரைக்கு வரும் என்பதே தற்போது, ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: