ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

AR Rahman: ஏ.ஆர்.ரஹ்மானை பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

AR Rahman: ஏ.ஆர்.ரஹ்மானை பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்

பாடகர்-இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை கெளரவிக்கும் பொருட்டு, கனடாவின் ஒன்டாரியோ, மார்க்கமில் உள்ள தெருவிற்கு நவம்பர் 2013-ல் அவரது பெயரிடப்பட்டது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ‘தி மொஸார்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்று அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று தனது 55-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனது இசையால் பல கோடி ரசிகர்களை மகிழ்வித்த அவரின் பயணம் ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தனது அற்புதமான இசைக்காக பல விருதுகளைப் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானை பற்றி பெரிதாக தெரியவராத விஷயங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.

  1. ரஹ்மான் இந்து குடும்பத்தில் திலீப் குமார் என்ற பெயரில் பிறந்தார். 23 வயதில், தனது ஆன்மீக குருவான காத்ரி இஸ்லாத்தை சந்தித்த பிறகு இஸ்லாத்தைத் தழுவினார்.

  2. அவர் சினிமா துறையில் அடியெடுத்து வைப்பதற்கு முன், சிறு வயதில் தூர்தர்ஷனின் வொண்டர் பலூன் நிகழ்ச்சியில் காணப்பட்டார். அங்கு அவர் ஒரே நேரத்தில் 4 கீபோர்டுகளை வாசிக்கும் குழந்தையாக புகழ் பெற்றார்.

  3. ரஹ்மானின் திறமையை முதன்முதலில் கண்டறிந்தவர் மணிரத்னம். 1992-ஆம் ஆண்டு அவர் இயக்கிய ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர்.ரஹ்மான். அந்தப் படத்திற்காக ரூ.25,000 சம்பளமாகப் பெற்றார். முதல் படத்திலேயே தேசிய விருதைப் பெற்று இசை ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார்.

  4. ரஹ்மான் சைரா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு அமீன், கதீஜா மற்றும் ரஹிமா என 3 குழந்தைகள் உள்ளனர். சுவாரஸ்யமாக, அவரது மகன் அமீனும் ரஹ்மான் பிறந்த தினமான ஜனவரி 6-ம் தேதியே பிறந்திருக்கிறார்.

  5. ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்காக ஒரே ஆண்டில் 2 ஆஸ்கர் விருதுகளை வென்ற முதல் ஆசியர் என்ற பெருமையை ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றுள்ளார். தவிர பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்ற இவர், 4 தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

  6. ஆஸ்கார் விருது பெற்ற “ஜெய் ஹோ” பாடல் ஆரம்பத்தில் சல்மான் கான் நடித்த யுவராஜ் படத்திற்காக இசையமைக்கப்பட்டது என்பது பலருக்குத் தெரியாது!

  7. ஸ்லம்டாக் மில்லியனர் தவிர, 127 ஹவர்ஸ் மற்றும் லார்ட் ஆஃப் வார் போன்ற ஹாலிவுட் படங்களுக்கும் ரஹ்மான் சிறந்த இசையைக் கொடுத்துள்ளார்.

  இதையும் படிங்க - மீண்டும் விஜய் டிவி-க்கு வரும் பாரதி கண்ணம்மா ரோஷினி ஹரிப்ரியன்?

  8. ஏஆர் ரஹ்மான், மிக் ஜாகர், டேவ் ஸ்டீவர்ட் மற்றும் ஜோஸ் ஸ்டோன் ஆகியோருடன் கைகோர்த்து சூப்பர் ஹெவி என்ற பெயரில் முற்றிலும் மாறுபட்ட இசையை அறிமுகப்படுத்தினார்.

  9. பாடகர்-இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை கெளரவிக்கும் பொருட்டு, கனடாவின் ஒன்டாரியோ, மார்க்கமில் உள்ள தெருவிற்கு நவம்பர் 2013-ல் அவரது பெயரிடப்பட்டது.

  10. ரஹ்மான் இசையமைத்த ஏர்டெல்லின் சிக்னேச்சர் ட்யூன், 150 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களுடன் உலகிலேயே அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மொபைல் ட்யூன் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: AR Rahman