Home /News /entertainment /

நடிகர் சிம்புவிற்கு நன்றி கடன்பட்டுள்ளேன் - நடிகை ஹன்சிகா ஓப்பன் டாக்!

நடிகர் சிம்புவிற்கு நன்றி கடன்பட்டுள்ளேன் - நடிகை ஹன்சிகா ஓப்பன் டாக்!

நடிகை ஹன்சிகா

நடிகை ஹன்சிகா

சிம்புவுக்கு ஒரு கால் தான் செய்தேன். ஓகே சொல்லி நடித்துக் கொடுத்தார் என நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

மஹா திரைப்படத்தில் நடித்துக் கொடுத்த நடிகர் சிம்புவிற்கு நன்றி கடன்பட்டுள்ளதாக ஹன்சிகா மோத்வானி தெரிவித்துள்ளார். 

சிலம்பரசன் - ஹன்சிகா நடிப்பில் ஜமீல் என்பவர் இயக்கி இருக்கும் திரைப்படம் மஹா. Child Abuse-ஐ மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாகிறது.  இதற்கான பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது  அதில் நடிகை ஹன்சிகா, நடிகர் ஆரி, இயக்குனர்கள் சீனு ராமசாமி, லக்ஷ்மன், ஆர்.கே.செல்வமணி,  தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், "தமிழ் சினிமாவில் 90% தயாரிப்பாளர்கள் முதல் படத்துடன் காணாமல் போய்விடுகின்றனர்.  ஐந்து சதவீத தயாரிப்பாளர்கள் தப்பித்து விடுகின்றனர்.  மீதம் இருக்கும் ஐந்து சதவீதம் தயாரிப்பாளர்கள் மட்டுமே லாபம் சம்பாதிக்கின்றனர்.  தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் திரைப்படங்கள் தொடர்ந்து தயாரிக்கப்படும்.

 நடிகர் சிம்புவிற்கு நன்றி கடன்பட்டுள்ளேன் - நடிகை ஹன்சிகா ஓப்பன் டாக்!
மஹா பிரஸ் மீட்


13வது ஆண்டு திருமண நாள்... கணவர் வித்யாசாகர் பிரிவால் கலங்கி நிற்கும் நடிகை மீனா!

திரைப்படங்களை வெற்றியடைய வைக்க நடிகர், நடிகைகள் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு படத்தை பிரபலப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். அந்த வகையில் இந்த திரைப்படத்தின் கதாநாயகி ஹன்சிகா மோத்வானி பாடல் வெளியீட்டு விழாவிற்கு வந்துள்ளார்" அதற்கு  நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.  அதேபோல் இயக்குனர் சீனு ராமசாமி பேசுகையில்,  ”கதாநாயகிகள் ஒரு குழந்தைக்கு தாயாக நடிப்பதை பாராட்ட வேண்டும். குறிப்பாக ஹன்சிகா போன்ற நடிகைகள் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதை பாராட்ட வேண்டும்” என தெரிவித்தார்.

 நடிகர் சிம்புவிற்கு நன்றி கடன்பட்டுள்ளேன் - நடிகை ஹன்சிகா ஓப்பன் டாக்!
மஹா பிரஸ் மீட்


அவரை தொடர்ந்து பேசிய தம்பி ராமையா, ”இந்தப்  படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள சிலம்பரசனின் காட்சிகள் 40 நிமிடங்கள் உள்ளன. இதில் நடித்துக் கொடுத்ததற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.  அதேபோல் நகைச்சுவை நடிகர்களுக்கு கதாநாயகிகளுடன் பயணிக்கும் வாய்ப்பு அதிகம். அந்த வகையில் ஹன்சிகாவுடன் இந்த திரைப்படத்தில் உடன் இருந்து நடித்துள்ளேன்.  அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்” என தெரிவித்தார்.

 நடிகர் சிம்புவிற்கு நன்றி கடன்பட்டுள்ளேன் - நடிகை ஹன்சிகா ஓப்பன் டாக்!
மேடையில் பேசிய ஹன்சிகா


இறுதியாக பேசிய நடிகை ஹன்சிகா, ”இந்தப் படத்தில் நடிக்க தன்னுடைய தாய் மிக முக்கிய காரணம். அவர்தான், நீ 50-வது படம் நடித்தால் அது மஹாவாகதான் இருக்க வேண்டும் என்று கூறினார் என ஹன்சிகா தெரிவித்தார். மஹா திரைப்படத்தில் நடிப்பதற்காக சிம்புவிற்கு ஒரே ஒரு கால் தான் செய்தேன். அவர் உடனே சம்மதம் தெரிவித்து நடித்துக் கொடுத்தார். அவர் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக நான் அவருக்கு நன்றி கடமைப்பட்டுள்ளேன்” என கூறினார். நடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகா ஆகியோர் வாலு திரைப்பட சமயத்தில் காதலித்தனர். அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்தனர்.

எந்த படத்தை எடுத்தாலும் கலாய்க்கிறார்கள் - 2K கிட்ஸ்கள் குறித்து பேசிய சூரி!

இந்த நிலையில் காதலித்து பிரிந்த இருவரும் மஹா திரைப்படத்தில் கணவன் மனைவியாக நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை தமிழகத்தில் சுமார் 400 திரையரங்குகளில் வெளியிட முயற்சித்து வருவதாக படக்குழுவினர் கூறினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sreeja
First published:

Tags: Actress Hansika, Kollywood, Simbu, Tamil Cinema

அடுத்த செய்தி