ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஜெய்பூர் அரண்மனையில் பிரமாண்டமாக நடக்கும் ஹன்சிகாவின் திருமணம்

ஜெய்பூர் அரண்மனையில் பிரமாண்டமாக நடக்கும் ஹன்சிகாவின் திருமணம்

ஹன்சிகா மோத்வனி

ஹன்சிகா மோத்வனி

ஹன்சிகாவின் திருமண விழாக்கள் டிசம்பர் 2 ஆம் தேதி இரவு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமணம் ஜெய்பூரில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  கோலிவுட்டில் இது திருமண சீசன், ஹரிஷ் கல்யாணை தொடர்ந்து மண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க உள்ளார் ஹன்சிகா மோத்வானி. டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் தனது காதலர் சோஹைல் கதுரியாவை அவர் கரம் பிடிக்கவிருக்கிறார்.

  முதலில் நண்பர்களான ஹன்சிகா மற்றும் சோஹைல் இருவரும் பின்னர் பிஸினெஸ் பார்ட்னர்களாகினர். இருவரும் இணைந்து 2020-ஆம் ஆண்டு முதல் ஒரு ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். சோஹைல் ஒரு தொழிலதிபர். அவர் வெட்டிங் பிளானிங் மற்றும் கிஃப்ட்டிங் சொல்யூஷன் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறார்.

  திருமண விழாக்கள் டிசம்பர் 2 ஆம் தேதி இரவு தொடங்கும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து மெஹந்தி மற்றும் சங்கீத் விழாக்கள் டிசம்பர் 3-ம் தேதி நடக்கும். ஹன்சிகாவின் குடும்பத்திற்கு நெருக்கமான ஆதாரத்தின்படி, ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு அதே அரண்மனையில் திருமணம் செய்து கொண்டார். ஹன்சிகா குடும்பத்தினருக்கு அந்த இடம் பிடித்திருந்தது. எனவே அவர்கள் ஹன்சிகாவின் திருமணத்தையும் அங்கு நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.

  சீரியல் நடிகரின் மனைவி உயிரை பறித்த பேலியோ டயட்... ஊட்டச்சத்து நிபுணர் சொல்வது இதுதான்!

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதற்கிடையே திருமண வேலைகளில் கவனம் செலுத்துவதற்காக நடிப்புக்கு சிறு இடைவெளி விட முடிவெடுத்திருக்கிறாராம் ஹன்சிகா.

  Published by:Shalini C
  First published:

  Tags: Hansika