ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகும் ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டம்!

பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகும் ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டம்!

ஹன்சிகா - சோஹெல் கதுரியா

ஹன்சிகா - சோஹெல் கதுரியா

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில், ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக 'ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா' ஒளிபரப்பாகவிருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டம் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை அரண்மனையில் தனது நண்பர் சோஹேல் கதுரியாவை திருமணம் செய்துக் கொண்டார். இதையடுத்து ஹன்சிகா மற்றும் சோஹேல் கதுரியாவின் திருமணம் தலைப்பு செய்தியாக மாறியது.

இப்போது, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில், ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக 'ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா' ஒளிபரப்பாகவிருக்கிறது. இதில் ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டங்கள் மற்றும் உற்சாகத்தை ரசிகர்கள் பார்த்து மகிழலாம். அதோடு சோஹேலை திருமணம் செய்துக் கொள்ள ஹன்சிகா எடுத்த முடிவு, ஃபேரிடேல் திருமணம் என 6 வாரங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகளை ஹன்சிகா பகிர்ந்துக் கொள்ளவுள்ளார்.

கல்லூரி விழாவில் அபர்ணா பாலமுரளியிடம் தவறாக நடந்துக் கொண்ட மாணவர் - வைரலாகும் வீடியோ

வெட்டிங் பிளானர்ஸ், டிசைனர்ஸ், குடும்பத்தினரின் கொண்டாட்டங்கள் உள்ளிட்டவற்றை இந்த ஹாட்ஸ்டார் ஒளிபரப்பில் பார்க்கலாம். தற்போது இதன் ஃபர்ஸ்ட்லுக் வீடியோவை வெளியிட்டுள்ளார் ஹன்சிகா. தவிர, பார்ட்னர், ரவுடி பேபி, மை நேம் இஸ் ஸ்ருதி, 105, கார்டியன் போன்ற படங்கள் ஹன்சிகா கைவசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actress Hansika, Tamil Cinema