10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனுஷூக்கு ஜோடியாக நடிக்கும் ஹன்சிகா

தனுஷ் | ஹன்சிகா

மாப்பிள்ளை படத்துக்கு பின்னர் மீண்டும் தனுஷூக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடிக்க இருக்கிறார்.

 • Share this:
  தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பட்டாஸ். இந்தப் படத்தை அடுத்து மாரி செல்வராஜின் கர்ணன், கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம் ஆகிய இரண்டு படங்களில் கவனம் செலுத்தினார். இதில் ஜகமே தந்திரம் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. அதேபோல் கர்ணன் படத்தின் பணிகளும் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கின்றன.

  இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அகஷ்யகுமார், சாரா அலிகான் உடன் ‘அத்ரங்கி ரே’ என்ற பாலிவுட் படத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமானார்.

  இதையடுத்து ராட்சசன் இயக்குநர் ராம்குமார், மித்ரன் ஜவஹர் ஆகியோரது படங்களில் நடிக்க இருக்கிறார் தனுஷ். இதில் மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. முன்னதாக குட்டி, உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களில் தனுஷ் உடன் மித்ரன் ஜவஹர் இணைந்து பணியாற்றியுள்ளார்.

  2011-ம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாப்பிள்ளை’ படத்தில் தனுஷ் - ஹன்சிகா ஜோடி இணைந்து நடித்திருந்த நிலையில் மீண்டும் தற்போது 10 வருடங்களுக்குப் பின் இந்த ஜோடி இணைந்து பணியாற்ற இருக்கிறது.
  Published by:Sheik Hanifah
  First published: