Home /News /entertainment /

சிம்புவுக்கு நன்றி சொன்ன நடிகை ஹன்சிகா!

சிம்புவுக்கு நன்றி சொன்ன நடிகை ஹன்சிகா!

சிம்பு - ஹன்சிகா

சிம்பு - ஹன்சிகா

‘மஹா’ படத்தின் ஷூட்டிங் முடிவடைந்திருக்கும் நிலையில் நடிகை ஹன்சிகா சிம்புவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. யு.ஆர்.ஜமீல் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் சிம்பு, ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடம் தம்பி ராமையா, கருணாகரன் ஆகியோரும் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

2015-ம் ஆண்டு வெளியான ‘வாலு’ படத்தில் சிம்பு - ஹன்சிகா இருவரும் இணைந்து நடித்திருந்தனர். பின்னர் இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இந்நிலையில் மஹா படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து நடித்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹா திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்திருக்கும் நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “இந்த 2020-ம் ஆண்டின் பெரும் பகுதி, இன்னல்கள் நிறைந்ததாக, நோயின் தாக்கத்திலிருந்து, நம்மை தற்காத்து கொள்வதாகவே கடந்து போனது. மனிதர்கள் பெருமளவில் இந்த கொடிய தொற்றுக்கு ஆளாகி, தங்கள் உயிரை இழந்து, தங்களின் அன்பான குடுமபத்தை சோகத்தில் ஆழ்த்தி, தவிக்க விட்டு சென்றுள்ளனர். அவர்களின் குடும்பங்கள் வலியிலிருந்து மீண்டு வந்து, நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். மடிந்து போன ஆத்மாக்கள் சாந்தியடையவும் வேண்டிக்கொள்கிறேன்.



இன்னொரு புறம் கொரோனா முன்கள பணியாளர்கள் கடும் உழைப்பை தந்து, இந்த கொடிய காலத்தில் நம்மை பாதுகாத்திருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் இந்த கொடிய காலத்தை அமைதியான வழியில் நாம் கடந்து வந்திருக்க இயலாது. கடும் மன உறுதியுடன், மனிதம் காக்க போராடிய அந்த வீரர்கள் அனைவரையும் இந்த தருணத்தில் வணங்குகிறேன். ‘மஹா’ திரைப்படம் முழுமையாக படப்பிடிப்பு முடிக்கப்பட்டது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

மேலும் படிக்க: ‘மண்டேலா’ படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடித்திருக்கும் சீரியல் நடிகை

பல தடைகளை தாண்டி நீடித்த, இந்த படப்பிடிப்பில், பங்குகொண்ட படக்குழுவினர் அனைவரும் பெரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். அரசின் அனைத்து வழிகாட்டுதல் நடைமுறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முழுதாக கடைப்பிடித்தே படப்பிடிப்பை நடத்தினோம். ஆரம்பம் முதல் இறுதி வரை பெரும் ஈடுப்பாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றிய இயக்குநர் யு.ஆர். ஜமீலுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் யு.ஆர். ஜமீல் மீது பெரும் நம்பிக்கை வைத்து இப்படத்தை முழுதாக தாங்கிய தூண்களான தயாரிப்பாளர்கள் மதியழகன், தத்தோ அப்துல் மாலிக், முகம்மது ஜுபையர் மற்றும் ராசிக் அஹமத் ஆகிய அனைவருக்கும் பெரும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததில் மொத்த படக்குழுவும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது. வரும் கோடை காலத்தில் படத்தை வெளியிட ஆவலாக உள்ளோம். இப்படத்தில் ஒரு பாத்திரமாக பங்கு கொள்ள ஒப்புக்கொண்ட சிம்புவிற்கு பெரும் நன்றி படத்தில் அவரின் பகுதிகளை ரசிகர்கள் கண்டிப்பாக பெரிய அளவில் கொண்டாடுவார்கள்.” இவ்வாறு ஹனிசிகா தெரிவித்துள்ளார்.















ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்


Published by:Sheik Hanifah
First published:

Tags: Hansika, Simbu

அடுத்த செய்தி