தனது 50-வது படமான மஹா வெளியானதையொட்டி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகை ஹன்சிகா மோத்வானி.
மாலிக் ஸ்டிரீம்ஸ் கார்ப்பரேஷன் சார்பில் வி.மதியழகன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் யு.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள திரைப்படம் 'மஹா'. இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். அவருடன் இணைந்து ஸ்ரீகாந்த், ரேஷ்மா, சனம் ஷெட்டி, மேகா ஸ்ரீகாந்த், நந்திதா ஜெனிபர், தம்பி ராமையா, மகத், கருணாகரன், சுஜித் சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு சுவாரஸ்யம் கூட்டும் விதமாக நீட்டிக்கப்பட்ட சிறப்பு தோற்றத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இப்படம் இன்று வெளியாகியுள்ளது.
இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மஹா நடிகை ஹன்சிகாவின் 50-வது படம். அல்லு அர்ஜூனுடன் தெலுங்கு படத்தில் அறிமுகமான அவர், தமிழில் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவகார்த்திகேயனுடன் மான்கராத்தே ஆகியப் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கொள்ளை கொண்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆப் டெவலப்பராக விஜய்... எதிர்பார்ப்பை கிளப்பும் வாரிசு!
இந்நிலையில் தனது 50-வது படம் வெளியானதையொட்டி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஹன்சிகா. அதில், ’என் ரசிகர்கள் அனைவரும் எனது குடும்பத்தினர். எனது கரியரின் ஆரம்பத்தில் இருந்து அவர்கள் அளித்து வரும் ஆதரவு அளப்பரியது. எனது 50-வது படமாக மஹா வெளியாகியிருக்கும் இந்த சிறப்பு தினத்தில் அவர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன். சில விஷயங்கள் மட்டுமே எப்போதும் நம் மனதில் பசுமை மாறாமல் இருக்கும், அப்படித்தான் மஹாவும். இந்தப் படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. எனக்கு எல்லாமே சினிமா தான். 50 படத்தில் நடிப்பது நடிகைகளுக்கு எளிதான காரியமல்ல. எல்லையற்ற அன்பு கொண்ட ரசிகர்களைப் பெற்ற ஒருவரால் தான் அது சாத்தியம். ஆகையால் இதுவரை எனக்கு ஆதரவளித்து வரும் எனது ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி. ஆதரவாக இருந்த எனது நண்பர் சிம்புவுக்கும், சக நடிகர்கலுக்கும், எனது 50-வது படமான மஹாவில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், மாலிக் சாருக்கும் உளப்பூர்வமான நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.