105 நிமிடம் ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் சாதனைப் படத்தில் ஹன்சிகா!

105 நிமிடம் ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் சாதனைப் படத்தில் ஹன்சிகா!

ஹன்சிகா

ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் திரைப்படத்தில் ஹன்சிகா நடிக்கிறார். தெலுங்கில் இப்படம் தயாராகிறது.

 • Share this:
  ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் திரைப்படத்தில் ஹன்சிகா நடிக்கிறார். தெலுங்கில் இப்படம் தயாராகிறது.

  ஹன்சிகா மோத்வானியின் 50-வது திரைப்படம் மஹா. இந்தப் படம் தவிர ஹன்சிகா கைவசம் இப்போதைக்கு எந்தப் படமும் இல்லை. தெலுங்கில் ஒரேயொரு வெப் சீரிஸ் மட்டும் உள்ளது. இந்நிலையில், ஒரு சாதனை திரைப்படத்தில் ஹன்சிகா ஒப்பந்தமாகியுள்ளார். ஒரே ஷாட்டில் இந்தத் திரைப்படம் எடுக்கப்பட உள்ளது.

  ஒரே ஷாட்டில் இதுவரை உலகம் முழுவதும் நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழில் அப்படி ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம், அகடம். 2015-ல் வெளியான ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ஸ்பானிஷ் திரைப்படம் விக்டோரியா 17 சர்வதேச விருதுகளை வென்றது.

  ஹன்சிகா நடிக்கும் படத்துக்கு 105 மினிட்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர். படம் 105 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருக்கும் என யூகிக்க முடிகிறது. இதில் இன்னொரு விசேஷம், ஹன்சிகா மட்டுமே இதில் நடிக்கிறார். ஒரே ஷாட், ஒரே நடிகை, தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தை ராஜா துஷா இயக்குகிறார். தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் இது வெளியாக வாய்ப்புள்ளது.

  சைக்கலாஜிகல் த்ரில்லராக இப்படம் தயாராகிறது. படம் குறித்து அதிக தகவல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: