ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Hansika: திருமண கொண்டாட்டத்தைத் தொடங்கிய ஹன்சிகா!

Hansika: திருமண கொண்டாட்டத்தைத் தொடங்கிய ஹன்சிகா!

ஹன்சிகா - சோஹெல் கதுரியா

ஹன்சிகா - சோஹெல் கதுரியா

ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் ஹன்சிகா மற்றும் சோஹேல் திருமணம் நடைபெறவுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஹன்சிகாவின் திருமண தேதி நெருங்குவதை அடுத்து, மாதா கி சௌகி என்ற சடங்கு சமீபத்தில் நடந்தது.

  ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹேல் கதுரியாவின் திருமணம் இன்னும் இரண்டு வாரங்களில் நடக்கவுள்ளது. நவம்பர் 22 அதாவது நேற்று அவர்களின் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் மாதா கி சௌகியுடன் தொடங்கியது. இந்த நிகழ்விற்காக ஹன்சிகா ஒரு பிரைட் சிவப்பு நிற புடவையில் அழகாக இருந்தார். சோஹேல் கதுரியா, சிவப்பு நிற ஷெர்வானியில் காட்சியளித்தார். ஹன்சிகா மற்றும் சோஹேலின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  மாதா கி சௌகி விழாவில் மணமகனும், மணமகளும் சிவப்பு நிறத்தை தீமாக தேர்ந்தெடுத்து பொருத்தமான ஆடைகளில் காட்சியளித்தனர். பின்னர் மகிழ்ச்சியுடன் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

  ஆண் குழந்தைக்கு தாயான கயல் சீரியல் நடிகை... குவியும் வாழ்த்துகள்!

  ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் ஹன்சிகா மற்றும் சோஹேல் திருமணம் நடைபெறவுள்ளது. இதையடுத்து டிசம்பர் 2-ஆம் தேதி சூஃபி இரவு, டிசம்பர் 3-ஆம் தேதி மெஹந்தி மற்றும் சங்கீத் நடைபெறும். அடுத்த நாள், டிசம்பர் 4-ஆம் தேதி, ஹல்டி விழா நடைபெறும், அதைத் தொடர்ந்து மாலையில் திருமணமும், கேசினோ தீமில் இரவு பார்ட்டியும் நடைபெறும். இதில் ஹன்சிகா மற்றும் சோஹேலின் குடும்ப உறுப்பினர்களும் நெருங்கிய நண்பர்களும் கலந்துக் கொள்கிறார்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actress Hansika