முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Hansika Motwani: மை நேம் இஸ் ஸ்ருதி - ஹன்சிகாவின் புதுப்பட அறிவிப்பு!

Hansika Motwani: மை நேம் இஸ் ஸ்ருதி - ஹன்சிகாவின் புதுப்பட அறிவிப்பு!

ஹன்சிகா

ஹன்சிகா

மஹா படத்தின் டீஸர் வெளியான நிலையில் படத்தை வெளியிட தயாரிப்பு தரப்பு முயற்சி எடுத்து வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தனது 50-வது படத்தை முடித்திருக்கும் ஹன்சிகா, புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

கொரோனாவில் வாய்ப்பிழந்த பல நடிகைகளில் ஹன்சிகாவும் ஒருவர். வழக்கம் போல், வருடத்துக்கு 200 படங்கள் தயாரித்திருந்தால், நான்கைந்து படங்கள் ஹன்சிகாவுக்கும் கிடைத்திருக்கும். இப்போது எண்ணி ஏழே படம்தான் மாசத்துக்கு வெளியாகிறது. அதில் ஹன்சிகாவை கன்சிடர் செய்கிறவர் பெரும்பாலும் யாருமில்லை.

ஹன்சிகாவின் கடைசித் தமிழ் படம், 100. அதர்வா நடித்து 2019-ல் வெளிவந்தது. அதே வருடம்தான் அவரது கடைசி தெலுங்குப் படமும் வெளியானது. இந்தியில் படங்களில்லை. தெலுங்கில் இல்லை. தமிழில் ஒரேயொரு படம், மஹா. ஹன்சிகாவின் ஐம்பதாவது படமான இது முடிந்து சமீபத்தில் டீஸரும் வெளியானது. இந்நிலையில், ’மை நேம் இஸ் ஸ்ருதி’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நேற்று முன்தினம் இதன் பூஜை நடந்தது.

மஹா போன்று இதுவும் நாயகி மையப்படம். ஸ்ரீனிவாஸ் ஓம்கார் படத்தை இயக்குகிறார். மேலதிக தகவல்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மஹா படத்தின் டீஸர் வெளியான நிலையில் படத்தை வெளியிட தயாரிப்பு தரப்பு முயற்சி எடுத்து வருகிறது. தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க இன்னும் சில வாரங்கள் ஆகலாம். அப்படியே திறந்தாலும் ஹன்சிகா படத்துக்கு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா என்பது சந்தேகம். கௌரவ வேடத்தில் நடித்துள்ள சிம்புவை வைத்தே படத்தை விற்க வேண்டிய நிலையில், திரையரங்கைவிட ஓடிடியை பாதுகாப்பானதாக தயாரிப்பாளர் தரப்பு கருதுகிறது. விரைவில் மஹா வெளியீடு குறித்து நல்ல சேதி வரலாம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actress Hansika