ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஹன்சிகாவுக்கு திருமணம்?! தயாராகும் ஜெய்பூர் அரண்மனை! தீயாய் பரவும் தகவல்கள்!

ஹன்சிகாவுக்கு திருமணம்?! தயாராகும் ஜெய்பூர் அரண்மனை! தீயாய் பரவும் தகவல்கள்!

நடிகை ஹன்சிகா

நடிகை ஹன்சிகா

திருமணத்தையொட்டி 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் கோட்டை மற்றும் அரண்மனை புதுப்பிக்கப்பட்டு, தயாராகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு, டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,. அவரை மணமுடிக்கும் மாப்பிள்ளை குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

    தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஹன்சிகா. இவர் விஜய், சிம்பு, சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் உட்பட பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

    ஒட்டுமொத்தமாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஹன்சிகாவுக்கு, மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். தற்போது தமிழில் 4 படம், தெலுங்கில் 2 படம் என அவர் பிசியாக உள்ளார். இந்தநிலையில் ஹன்சிகாவுக்கு டிசம்பர் மாதம் திருமணம் நடக்கவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஆந்திராவில் தொடங்கும் சீயான் 61 பட ஷூட்.. தீபாவளிக்கு வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக்!?

    இந்த திருமணம் புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற உள்ளது. இதையொட்டி 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் கோட்டை மற்றும் அரண்மனை புதுப்பிக்கப்பட்டு, தயாராகி வருகிறது. ஆடம்பர முறையில் அதிக பொருட்செலவில் இந்த திருமணம் நடைபெறவிருக்கிறது.




     




    View this post on Instagram





     

    A post shared by Hansika Motwani (@ihansika)



    டிசம்பர் மாதம் திருமணம் என்பது உறுதி செய்யப்பட்டாலும், எந்த நாளில் நடைபெறும் என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. இதில் பங்கேற்க உள்ள விருந்தினர்களுக்கு ஜெய்ப்பூர் அரண்மனைகள் தயார் செய்யப்படுகின்றன.

    KGF இயக்குனரின் அடுத்தப் படம்.. மிரட்டும் பிரித்விராஜ் லுக்!

    ஹன்சிகா மோத்வானி திருமணம் முடிக்கப் போகும் மாப்பிள்ளை ஒரு தொழிலதிபர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் குறித்த கூடுதல் விபரங்கள் இன்னும் சில நாட்களில் தெரியவரும்.

    ஜெய்ப்பூர் அரண்மனை

    கடந்த 2013-ல் ஹன்சிகாவையும், சிம்புவையும் இணைத்து செய்திகள் வெளிவந்தன. இருவரும் சில ஆண்டுகள் டேட்டிங் செய்த நிலையில், அடுத்தகட்டமாக திருமணத்திற்கு நகராமல் சிம்பு - ஹன்சிகா ஜோடி பரஸ்பரம் பிரிந்தது. இந்தநிலையில் டிசம்பர் மாதம் ஹன்சிகாவுக்கு திருமணம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Published by:Musthak
    First published:

    Tags: Actress Hansika