நடிகை ஹன்சிகா தனது திருமணத்தை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு விருந்து கொடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நடிகை ஹன்சிகா மோத்வானி, சோஹேல் கதுரியாவை ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா அரண்மனையில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார். அப்போது அவர் சிவப்பு நிற லெஹெங்காவை அணிந்திருந்தார், அதே சமயம் மணமகன் சோஹேல், கிரீம் கலர் ஷெர்வானியில் காணப்பட்டார். இந்த ஜோடியின் புதிய படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.
திருமண விழாவில் நடந்த இசை கச்சேரியில், மணக்கோலத்தில் நடிகை ஹன்சிகா-சோஹேல் கதுரியா நடந்து வரும் வீடியோ இணைய தளத்தில் வைரல் ஆனது. அதில் இஸ்லாமிய முறைப்படி ஹன்சிகா தங்க நிற உடையில் ஜொலித்தார். பின்னர் மணமக்க்கள் இருவரும் இணைந்து நடனமாடினர்.
விஜய் - லோகேஷ் கனகராஜின் தளபதி 67 பூஜையுடன் தொடக்கம்!
இதற்கிடையே ஹன்சிகா தனது திருமணத்தை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு விருந்து கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையைச் சுற்றி வசிக்கும் குழந்தைகளுக்கு திருமண உணவுகளை வழங்க ஏற்பாடு செய்திருந்த ஹன்சிகா, தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம், இந்தியா முழுவதும் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு தனது திருமண நாளில் சுவையான உணவை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. ஹன்சிகாவின் இந்த செயலை வெகுவாக பாராட்டி வருகிறார்கள் ரசிகர்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Hansika