• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Hansika Motwani: திருமண வேலைகளில் பிஸியான ஹன்சிகா!

Hansika Motwani: திருமண வேலைகளில் பிஸியான ஹன்சிகா!

ஹன்சிகா

ஹன்சிகா

ஹன்சிகாவின் வீட்டில் திருமண ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. மாப்பிள்ளை யார் என்கிறீர்களா?

  • Share this:
    நடிகை ஹன்சிகாவின் வீட்டில் திருமண கொண்டாட்டம் களை கட்டியிருக்கிறது.

    தனுஷ் நடித்த ’மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஹன்சிகா. பின்னர் குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயின் என்ற இடத்தைப் பிடித்தார். தற்போது ஹன்சிகாவின் 50-வது படமான ‘மஹா’ ரிலீசுக்கு தயாராகி வருகிறது. நடிகை ஹன்சிகா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

    தற்போது ஹன்சிகாவின் வீட்டில் திருமண ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. மாப்பிள்ளை யார் என்கிறீர்களா? திருமணம் ஹன்சிகாவுக்கு அல்ல, அவரது அண்ணன், பிரசாந்த் மோத்வானிக்கு தான். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வரும் மார்ச் 20-ம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அவருக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. அங்குள்ள அரண்மனையை வாடகைக்கு எடுத்துள்ள ஹன்சிகாவின் குடும்பத்தினர், 2 நாள் விழாவாக திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: