ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Hansika: வருங்கால கணவரின் முதல் திருமணத்தில் ஹன்சிகா - வைரலாகும் வீடியோ

Hansika: வருங்கால கணவரின் முதல் திருமணத்தில் ஹன்சிகா - வைரலாகும் வீடியோ

வருங்கால கணவரின் முதல் திருமணத்தில் ஹன்சிகா

வருங்கால கணவரின் முதல் திருமணத்தில் ஹன்சிகா

வருங்கால கணவரின் திருமண கொண்டாட்டத்தில் ஹன்சிகா கலந்துக் கொண்ட புதிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகை ஹன்சிகா தனது வருங்கால கணவரின் முதல் திருமணத்தில் கலந்துக் கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  நடிகை ஹன்சிகா மோத்வானி, மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோஹேல் கதுரியாவை திருமணம் செய்ய உள்ளார். கடந்த சில நாட்களாக இவர்களின் திருமண செய்தி தான் இணையத்தில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. பாரிஸில் வைத்து சோஹேல் தனக்கு ப்ரொபோஸ் செய்யும் படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டு ரிலேஷன்ஷிப்பை உறுதிப்படுத்தியிருந்தார் ஹன்சிகா.

  டிசம்பர் 4-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஹன்சிகா மற்றும் சோஹேல் திருமண நிகழ்வு நடக்கவிருக்கிறது. ஹல்டி விழா காலையில் நடைபெறும் என்றும், மெஹந்தி மற்றும் சங்கீத் டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், சோஹேல் முன்பு ரிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார். அவர்கள் இருவரும் 2016-ஆம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாடுகளால் பிரிந்தனர்.

  இவர்களது திருமண கொண்டாட்டத்தில் ஹன்சிகா கலந்துக் கொண்ட புதிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், சோஹேல் மற்றும் ரிங்கியின் சங்கீத் விழாவிலும், ரோகா விழாவிலும் கலந்துக் கொண்ட ஹன்சிகா, நடனமாடுவதைக் காண முடிந்தது.

  ரஞ்சிதமே ரஞ்சிதமே... வெளியானது விஜய் குரலில் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!

  ' isDesktop="true" id="830653" youtubeid="MI1tKZvyOkc" category="cinema">

  வேலையைப் பொறுத்தவரை, ஹன்சிகா கடைசியாக 'மஹா' என்ற பழிவாங்கும் த்ரில்லர் படத்தில் நடித்தார். இது பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அவர் நடித்துள்ள 'கார்டியன்' என்ற திகில் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இது தவிர, டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்காக ராஜேஷ் இயக்கும் 'மை3' படத்தின் மூலம் ஹன்சிகா, டிஜிட்டலிலும் அறிமுகமாகிறார். முகென் ராவ், சாந்தனு பாக்யராஜ், ஜனனி ஐயர், ஆஷ்னா ஸவேரி மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் இணைந்து நடிக்கும் இதில் ஹன்சிகா, ரோபோவாக நடிப்பதாக கூறப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actress Hansika