Home /News /entertainment /

Maha: ஹன்சிகாவின் 50-வது படம் - மஹா டீசர் ஜூலை 2-ம் தேதி வெளியீடு!

Maha: ஹன்சிகாவின் 50-வது படம் - மஹா டீசர் ஜூலை 2-ம் தேதி வெளியீடு!

மஹா டீசர்

மஹா டீசர்

சிம்பு படத்தில் இருப்பது மார்க்கெட்டிங்குக்கு உதவும் என்பது வேறு விஷயம்.

    ஹன்சிகா மோத்வானியின் 50-வது படத்தின் டீஸர் வரும் ஜுலை 2-ஆம் தேதி வெளியாகிறது.

    2003-ல் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா, 2007-லிருந்து தொடர்ச்சியாக நடித்து வருகிறார். ஐம்பதாவது படத்தை நிறைவு செய்ய அவருக்கு இவ்வளவு வருடங்கள் தேவைப்பட்டிருப்பது ஆச்சரியம். இத்தனைக்கும் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிப் படங்களில் நடிக்கிறார்.

    ஹன்சிகாவின் 50-வது படம் மஹா. ஜமீல் இயக்கியிருக்கும் இந்தப் படம் தொடங்கி பல வருடங்கள் ஆகிறது. தயாரிப்பாளரின் பொருளாதாரப் பிரச்சனையால் மாநகரப் பேருந்தாக பல நிறுத்தங்களில் நின்றும், பிரேக் டவுனாகியும் ஒருவழியாக டீஸர் லெவலுக்கு வந்திருக்கிறது. இதனிடையில், இயக்குனர் ஜமீலை தவிர்த்து வேறொருவரை வைத்து படத்தை பட்டி டிங்கரிங் செய்து ஓடிடியில் தள்ளிவிட தயாரிப்பாளர் முயற்சித்ததும், ஜமீல் அதற்கு எதிராக கோர்ட்டுக்கு சென்றதும் நடந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மஹாவில் கெஸ்ட் ரோலில் சிம்புவை உள்ளே கொண்டு வந்தனர். அவர் காட்டிய இன்வால்வ்மெண்டைப் பார்த்து காட்சிகளை அதிகரித்து, ஒரு பாடல் காட்சியும் வைத்து, கிட்டத்தட்ட பாதி படத்தில் அவர் வருவது போல் சிம்புவின் கதாபாத்திரத்தை மாற்றியிருக்கிறார்கள். சிம்பு படத்தில் இருப்பது மார்க்கெட்டிங்குக்கு உதவும் என்பது வேறு விஷயம்.

    ஹன்சிகாவின் நாயகி மையப் படமான மஹாவின் டீஸரை ஜுலை 2-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார்கள். விளக்கு வைக்கும் நேரத்தில் வெளியிடுகிறார்கள். படமும் அதேபோல் பிரகாசமான எதிர்காலத்தை ஹன்சிகாவுக்கு தரட்டும். மஹாவை தவிர்த்து எந்தப் படமும் ஹன்சிகா கைவசம் இல்லை என்பது முக்கியமானது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actress Hansika

    அடுத்த செய்தி