கடந்த ஆண்டு டிசம்பரில் தொழிலதிபர் சோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொண்ட ஹன்சிகா மோத்வானி, சில விமர்சனங்களையும் எதிர்கொண்டார்.
ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், தனது முடிவைப் பற்றி மக்கள் தவறாகப் பேசுவது தனக்கு ஒரு பொருட்டல்ல என்று கூறினார். அவரைப் பொறுத்தவரை, அது அவருடைய இதயத்திலிருந்து வருகிறது.
ஹன்சிகா தனது 24 வயதில் திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும் இருப்பினும், தனது பணியின் காரணமாக அவரால் அதை செய்ய முடியவில்லை என்றும் கூறினார். பின்னர் நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும் என்று ஃப்ரீயாக விட்டு விட்டாராம். திருமணம் செய்து கொள்ளும்படி தனக்கு எந்த அழுத்தமும் இல்லை என்றும் அவர் ஊடக பேட்டியில் தெரிவித்தார். இருப்பினும், சோஹேல் பொறுமை இழந்து, இப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஹன்சிகாவிடம் கூறினாராம். அதனால் தான் தற்போது அவர்களின் திருமணம் நடந்ததாம்.
சோஹேலின் முதல் திருமணத்தை ஹன்சிகா முறித்து விட்டதாகவும் சிலர் குற்றம் சாட்டினர். ‘ஹன்சிகாவின் காதல் ஷாதி நாடகம்’ என்ற தனது திருமண நிகழ்வில் அவர் இதைப் பற்றி பேசினார். ஒரு பிரபலமாக இருப்பதற்கு தான் கொடுக்க வேண்டிய விலை இது என்று அவர் இதுகுறித்து குறிப்பிட்டார். சோஹேல் இதற்கு முன்பு ஹன்சிகாவின் நெருங்கிய தோழியான ரிங்கியை திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணத்தில் ஹன்சிகா கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Hansika