Home /News /entertainment /

ஹன்சிகா நடிக்கும் ‘மஹா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு….

ஹன்சிகா நடிக்கும் ‘மஹா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு….

மஹா படத்தின் போஸ்டர்

மஹா படத்தின் போஸ்டர்

Hansika Mahaa Movie : மஹா படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஜே.லக்ஸ்மன் ஒளிப்பதிவையும், ஜான் ஆப்ரஹாம் எடிட்டிங்கையும் மேற்கொண்டுள்ளனர்.

    சிம்புவின் சிறப்பு தோற்றத்தில் ஹன்சிகா நடித்துள்ள மஹா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    பல மாதங்களாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒருவழியாக படத்தின் வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    தமிழில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பெயர் பெற்ற ஹன்சிகா, மஹா படத்தில் லீட்கேரக்டரில் நடிக்கிறார்.

    இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிம்பு இடம்பெற்றுள்ளார். மலேசியாவில் இயங்கி வரும் மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் மஹா படத்தை தயாரித்துள்ளது.

    இதையும் படிங்க - 36 வருடங்களுக்கு முன்பு வெளியான கமலின் விக்ரம் வசூல் எவ்வளவு தெரியுமா?

    இந்நிலையில் மஹா திரைப்படம் அடுத்த மாதம் 22ம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.





    த்ரில்லர் ஜேனரில் இந்த படத்தை படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர். சமீபகாலமாக ஹன்சிகாவுக்கு சொல்லிக் கொள்ளும்படியான வெற்றிப் படங்கள் அமையவில்லை. இதனால் மஹா திரைப்படத்தின் வெற்றியை அவர் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார்.

    இதையும் படிங்க - ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலுடன் மீண்டும் இணையும் சூர்யா...

    பலமுறை படத்தின் வெளியீடு குறித்த தகவல்கள் ஊடகங்கள் வெளிவந்துள்ளன. இவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை சற்று குறையச் செய்துள்ளன என்றே கூறலாம்.

    அதே நேரத்தில் மற்ற படங்கள் ரசிகர்களை ஈர்க்காத நிலையில்,மஹா படம் நன்றாக அமைந்திருந்தால் இந்தப் படம் வெற்றிப் படமாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

    மஹா படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஜே.லக்ஸ்மன் ஒளிப்பதிவையும், ஜான் ஆப்ரஹாம் எடிட்டிங்கையும் மேற்கொண்டுள்ளனர்.

    இயக்குனர் யு.ஆர். ஜமீலுடன் இணைந்து இந்த படத்தை அஞ்சு விஜய் இயக்கியுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Hansika, Simbu

    அடுத்த செய்தி