சிவசங்கர் பாபாவை தூக்கிலிடுங்கள் - பிரபல நடிகை ஆவேசம்

சிவசங்கர் பாபா

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

 • Share this:
  ஆன்மீகவாதியும், கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளியின் நிறுவனருமான சிவசங்கர் பாபா மீது, சமூக வலைதளங்களில் முன்னாள் மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுக்களை பதிவிட்டனர். குழந்தைகள் நல உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால், முன்னாள் மாணவிகள் மூவர் மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

  அதன் அடிப்படையில் சிவசங்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், சிவசங்கர் தலைமறைவானார். அவர் உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துமவனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுவதால், சிபிசிஐடி தனிப்படை அங்கு விரைந்துள்ளது. சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிசிஐடி லுக்அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளது. லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.

  Also Read :  14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அவலம்!

  இதற்கிடையே, மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுக்க உதவிய ஆசிரியைகளை வழக்கில் சேர்க்கும் பணியில் சிபிசிஐடி ஈடுபட்டுள்ளது. இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் ஆசிரியைகள் பாரதி மற்றும் தீபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  இதனிடையே சிவசங்கர் பாபாவுக்கு ஆதரவாக நடிகர் சண்முகராஜன் பேசியிருந்தார். அதில் பாபா பெண்கள் மீது நாட்டமற்றவர். அவர் ஒரு சித்தர். அவருக்கென்று தனிப்பட்ட வங்கி கணக்கு கூட இல்லை என்று தெரிவித்திருந்தார். இவரது கருத்து சமூக வலைதளங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

  Also Read : மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய சிவசங்கர் பாபா டெல்லியில் கைது - சி.பி.சி.ஐ.டி அதிரடி

  இந்நிலையில் சிவசங்கர் பாபாவை தூக்கிலிட வேண்டும் என்று நடிகை காஜல் பசுபதி ட்வீட் செய்துள்ளார். இந்த ரேபிஸ்ட் பாபா பற்றிய வீடியோ ஒன்றை அப்லோடு செய்ய காலையில் இருந்து முயற்சி செய்தும் முடியவில்லை. எனக்கு ஏன் இந்த அப்லோடு பிரச்சனை என்று கூறி ட்விட்டரை விளாசியுள்ளார் காஜல்.  இந்நிலையில், சுஷில் ஹரி பள்ளியில் படிக்கும் மாணவர்கள், பள்ளியில் இருந்து வெளியேறும் வகையில், தங்கள் பெற்றோருடன் வந்து, மாற்றுச் சான்றிதழ் பெற விண்ணப்பித்தனர். குழந்தைகளின் எதிர்காலத்தை கருதியே, வேறு பள்ளியில் சேர்க்க முடிவு செய்துள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர். இதேபோல், சுஷில்ஹரி பள்ளியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: