Siva Shankar Baba: சிவசங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள் - நடிகை ட்வீட்

சிவசங்கர் பாபா

மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய சிவசங்கர் பாபாவை டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

  • Share this:
    பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கைதாகியுள்ள சிவசங்கர் பாபாவை தூக்கிலிடுங்கள் என்று நடிகை காஜல் பசுபதி கூறியுள்ளார்.

    சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தொடர்ச்சியாக புகார்கள் அளித்து வருகின்றனர். கேளம்பாக்கம் சுசீல் ஹரி பள்ளியை நிர்வகிக்கும் சிவசங்கர் பாபா மீதும் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவிகள் பலர் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இதனைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தில் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நெஞ்சுவலி என மருத்துவமனையில் அடைக்கலம் புகுந்தார் சிவசங்கர் பாபா. மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய சிவசங்கர் பாபாவை டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.



    இந்நிலையில் நடிகை காஜல் பசுபதி, ’சிவசங்கர் பாபாவை தூக்கிலுடுங்கள்’ என்று இணையத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ’காலையிலிருந்து இந்த சிவசங்கர் பாபா குறித்த வீடியோவை அப்லோட் செய்ய முயற்சிக்கிறேன், ஆனால் முடியவில்லை, ஏன் இப்படி?' என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பள்ளி மாணவிகள் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்கள், சாமியார்கள் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் துணிச்சலாக புகார்கள் அளித்து வருகின்றனர். குற்றம் செய்தவர்களுக்கு அரசு கடுமையான தண்டனை தர வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் கருத்தாக உள்ளது. காஜல் பசுபதி போன்றவர்கள், குற்றமிழைத்தவர்களை தூக்கில் போட்டால் என்ன என்று கேள்வி எழுப்புவது பொதுமக்கள் மத்தியில் ஆதரவை ஏற்படுத்தி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: