ஜல்லிக்கட்டு, ஈமாயூ போன்ற விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற படங்களை இயக்கிய லிஜோ பெல்லி சேரி, மம்மூட்டி நடிப்பில் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இன்று முதல் இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் வேளாங்கன்னி அருகே ஒரு கிராமத்தில் நடைபெறும் கதை என்பதால் படத்தில் பெரும்பாலும் தமிழிலேயே வசனங்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக மம்மூட்டி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வசனங்களைப் பேசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதன் காரணமாக இந்தப் படம் தமிழிலும் நேரடியாக வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் சில்லுக்கருப்பட்டி, ஏலே படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம், நண்பகல் நேரத்து மயக்கம் படம் குறித்து பகீர் குற்றச்சாட்டை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இந்தப் படத்தில் காட்சிகளும் படத்தின் திரைக்கதையும் முக்கிய அம்சங்களும் திருடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அவரது பதிவில், tealing all the aesthetics from a film isn't acceptable. 'ஏலே' படத்திற்காக ஒரு கிராமத்து மக்களை படப்பிடிப்பிற்காக தயார் செய்து முதன் முதலில் அக்கிராமத்தில் அவர்களையும் நடிக்க வைத்து படப்பிடிப்பு நடத்தினோம்.
அதே கிராமத்தில் 'நண்பகல் நேரத்து மயக்கம்' படமாக்கப்பட்டது மகிழ்ச்சியே. இருப்பினும், நான் பார்த்து பார்த்து சேர்த்த அழகியல் யாவும் இந்த படம் நெடுக களவாடப்பட்டிருப்பது, சற்றே அயற்சியை தருகிறது. ஐஸ்காரர் இங்கே பால்க்காரர்.
செம்புலி இங்கே செவலை. மார்சுவரி வேன் பின்னே செம்புலி ஓடியது போல், இங்கே மினி பஸ் பின்னே செவலை ஓடுகிறது. நான் அறிமுகப்படுத்திய 'சித்திரை சேனன்' நடிகர் - பாடகர், ஏலே- வில் தான் ஏற்ற கலைக்குழு பாடகர் கதாபாத்திரம் போலவே, இங்கு மம்மூட்டி அவர்களுடன் பாடிக் கொண்டிருக்கிறார்.
படமாக்கப்பட்ட வீடுகள், பல முறை பார்த்து பின் படமாக்கப்பட வேண்டாம் என்று நிராகரித்த வீடுகள்- இவை யாவும் படத்தில் பார்த்தேன். நடக்கும் நிகழ்வுகள், பின்னே ஓடும் ஜாக்கி சான் பட வசனத்தோடு ஒத்துப்போவது போல், ஒப்பிட்டு சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றன!
எனக்காக நான் தான் பேச வேண்டும், ஆதங்க பட வேண்டும் என்ற சூழலில் தவிர்க்க முடியாமல் இதை பதிவிடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பகல் நேரத்து மயக்கம் படக்குழுவினர் ஹலிதா ஷமீமின் குற்றச்சாட்டுக்கு பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mammootty