தொரட்டி பட நாயகி கடத்தல்? உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்

சினிமாவில் நடிப்பது தன்னுடைய தந்தை மற்றும் வளர்ப்பு தாய்க்கு பிடிக்காததால் தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக தனக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக படக்குழுவினரிடம் சத்தியகலா புலம்பி வந்ததாக கூறப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: July 26, 2019, 6:15 PM IST
தொரட்டி பட நாயகி கடத்தல்? உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
தொரட்டி பட போஸ்டர்
Web Desk | news18
Updated: July 26, 2019, 6:15 PM IST
பெற்றோர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படும் 'தொரட்டி' பட கதாநாயகியை நேரில் ஆஜர் படுத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

'ஷாமன்' தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவாகி வரும் படம் 'தொரட்டி'. இந்த படத்தில் சத்தியகலா என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் கதாநாயகி திடீரென மாயமானார்.

இது தொடர்பாக பொள்ளாச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்த பட தயாரிப்பு நிறுவனம், புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளது.


அதில், சினிமாவில் நடிப்பது தன்னுடைய தந்தை மற்றும் வளர்ப்பு தாய்க்கு பிடிக்காததால் தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக தனக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக படக்குழுவினரிடம் சத்தியகலா புலம்பி வந்ததாக கூறப்பட்டுள்ளது.

சென்னையில் சத்தியகலா வசித்து வந்த வீட்டில் தற்போது யாரும் இல்லாத நிலையில் சத்தியகலாவின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் பட நிறுவனம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தந்தையால் கடத்தப்பட்ட சத்தியகலாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

Loading...

இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் இந்துகருணாகரன் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், நிர்மல்குமார் அடங்கிய அமர்வில் முறையிட்டார். இதையடுத்து, இந்த மனுவை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Also see...

First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...