தினமும் 7 மணி நேரம் உடற்பயிற்சி- சிம்பு உடலைக் குறைத்த ரகசியத்தைப் பகிரும் பயிற்சியாளர்

சிம்பு

நடிகர் சிம்பு தனது உடல் எடையை குறைக்க ஒரு நாளைக்கு 7 மணி நேரம் உடற்பயிற்சி செய்ததாக அவரது பயிற்சியாளர் சந்திப் தெரிவித்துள்ளார்.

  • Share this:
நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்னும் விளையாட்டை மையப்படுத்திய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் எடை குறைந்த மிகவும் ஒல்லியான சிலம்பரசனைப் பார்த்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்தார்கள். அவரது உடல் எடை குறைப்புக்கு காரணம் கடுமையான பயிற்சி என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

சிம்புவின் உடல் எடைக் குறைந்தது குறித்து அவருக்கு பயிற்சி அளித்த சந்தீப் தெரிவிக்கையில், ‘காலை 4 மணி நேரம் மாலை 3 மணி நேரம் என கடும் பயிற்சிகள் மேற்கொண்டு சிலம்பரசன் 30 கிலோ வரை குறைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஓட்டம், பாக்ஸிங், டென்னிஸ், நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டு சுமார் ஒரு வருட காலத்தில் நூறு கிலோவிலிருந்து 70 கிலோவாக நடிகர் சிம்பு தனது உடல் எடையை குறைத்துள்ளார்.

பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற உடல் அமைப்பை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் சிலம்பரசன் கடுமையாக உழைத்ததாக அவரது பயிற்சியாளர் சந்தீப் தெரிவித்துள்ளார்.
Published by:Karthick S
First published: