‘சூர்யா 38’ பாடல்கள் எப்படி? ஜி.வி.பிரகாஷ் குமார் பதில்

சூர்யா 38 படத்திற்காக தயாராகியுள்ள பாடல்களை கேட்டுவிட்டு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்-க்கு நடிகர் சூர்யா வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

news18
Updated: March 29, 2019, 11:50 AM IST
‘சூர்யா 38’ பாடல்கள் எப்படி? ஜி.வி.பிரகாஷ் குமார் பதில்
சூர்யா 38
news18
Updated: March 29, 2019, 11:50 AM IST
சூர்யா நடிப்பில் உருவாக உள்ள படத்தின் பாடல்கள் சிறப்பாக இருக்கும் என படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் கூறியுள்ளார்.

சூர்யா நடிப்பில் கடைசியாக தானா சேர்ந்த கூட்டம் படம் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியானது. படம் வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் அடுத்த படம் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘என்ஜிகே’ படம் மே 31-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மோகன்லால், ஆர்யா, சூர்யா நடிக்கும் ‘காப்பான்’ படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து சூர்யா இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் படத்திறக்காக தயாராகியுள்ள பாடல்களை கேட்டுவிட்டு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்-க்கு நடிகர் சூர்யா வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிர்ந்த ஜி.வி.பிரகாஷ், ‘பூக்களுக்கும், வாழ்த்து செய்திக்கும் நன்றி, 'சூர்யா 38' பாடல் நம் குழுவுக்கு சிறப்பான ஒன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.Also watch

First published: March 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...