முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பாட்டு ரெடி... தங்கலான் படத்தின் அட்டகாச அப்டேட்டை கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!

பாட்டு ரெடி... தங்கலான் படத்தின் அட்டகாச அப்டேட்டை கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!

ஜி.வி.பிரகாஷ் - தங்கலான்

ஜி.வி.பிரகாஷ் - தங்கலான்

தங்கலான் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்த திரைப்படம் மெகா பட்ஜெட்டில் பீரியட் படமாக உருவாகி வருகிறது. படத்தின் அடுத்தடுத்த நகர்வு குறித்து படக்குழுவினர் தொடர்ந்து அப்டேட் கொடுத்து வருகின்றனர்.

தங்கலான் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அவர் சமீபத்தில் இணையதளம் ஒன்றில் பேசுகையில், படத்தின் மூன்று பாடல்களை முடித்திருப்பதாகவும், அவை நன்றாக வந்திருப்பதாகவும் தெரிவித்தார். பா.ரஞ்சித்தின் பாடலாசிரியர்கள் குழு எப்போதும் தன்னை சுற்றிக் கொண்டிருப்பதாகவும், ட்யூன் தயாரானதும் உடனடியாக வரிகளை கொடுத்து விடுவதாகவும் கூறினார்.

அதோடு தங்கலான் படத்தின் பாடல் வரிகள் மிகவும் அழகாக உருவாக்கப்பட்டிருப்பதாகவும், படத்தில் பழங்குடியினர் குறித்த காட்சிகள் அதிகம் என்றும் கூறியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். இந்தப் படத்தில் விக்ரம், பார்வதி திருவோத்து, பசுபதி, மாளவிகா மோகனன், டேனியல் கால்டாகிரோன் மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

என் மகன் விஜய் நல்லாருக்கனும்... ராமேஸ்வரம் கோயிலில் பசு பூஜை செய்த எஸ்.ஏ.சந்திரசேகர்!

தங்கலான் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவின் கோலார் தங்க வயல்களில், சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சுற்றி நடக்கும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதையாக இப்படம் இயக்கப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vikram, GV Prakash, Pa. ranjith