ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சூரரைப்போற்று இந்தி ரீமேக் குறித்த அட்டகாச அப்டேட்!

சூரரைப்போற்று இந்தி ரீமேக் குறித்த அட்டகாச அப்டேட்!

சுதா கொங்கரா - ஜி.வி.பிரகாஷ்

சுதா கொங்கரா - ஜி.வி.பிரகாஷ்

சூரரைப்போற்று திரைப்படம் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிப்பில் சூர்யாவின் 'சூரரைப் போற்று' படத்தின் இந்தி ரீமேக்கான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் சுதாவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார் ஜி.வி.பிரகாஷ். மேலும் இந்தி பதிப்பிற்கான பாடல்கள் புதியதாக இருக்கும் என்றும் அதன் பதிவு நடைபெற்று வருவதாகவும் அப்டேட் தந்துள்ளார். "சூரரைப்போற்று இந்திப் பாடல்கள் பதிவாகி வருகிறது... புதிய பாடல்களுடன் வருகிறது... மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறோம்" என்று அவர் தனது ட்வீட்டில் தெரிவித்திருந்தார்.

சூரரைப்போற்று திரைப்படம் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. சிம்ப்ளிஃபை டெக்கான் என்ற குறைந்த கட்டண விமான நிறுவனத்தை நிறுவியவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இயக்கப்பட்டது. இப்படத்தில், சூர்யா ஹீரோவாகவும், அபர்ணா பாலமுரளி ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். ஊர்வசி, கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பசங்க பட அன்புவுக்கு கல்யாண வயசாச்சா? பொண்ணு யார் தெரியுமா?

இந்தி ரீமேக்கில் சூர்யாவாக அக்‌ஷய் குமாரும், அபர்ணா பாலமுரளியாக ராதிகா மதனும் நடித்துள்ளனர். இந்த ரீமேக் மூலம் நடிகர் சரத்குமாரும் இந்தியில் அறிமுகமாகவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: GV prakash