ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மார்க் ஆண்டனி படத்தில் இணைந்த இசை அசுரன்...!

மார்க் ஆண்டனி படத்தில் இணைந்த இசை அசுரன்...!

ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ்

விஷாலின் மார்க் ஆன்டணி படத்துக்கு இசை அசுரன் ஜீ.வி.பிரகாஷை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என ஆதிக் ரவிச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

விஷாலின் 33 வது படமாக மார்க் ஆண்டனி தயாராகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இசை அசுரன் என புதிய பெயரை ஜீ.வி.பிரகாஷுக்கு வழங்கியுள்ளனர்.

விஷால் நடிப்பில் வீரமே வாகை சூடும் படம் தயாராகியுள்ளது. ஜனவரி 26 படம் வெளியாகும் என முன்பு அறிவித்திருந்தனர். கொரோனா தொற்றும், ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அதிகரித்து வருவதால் படம் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. அடுத்து லத்தி படத்தில் நடித்து வருகிறார். விஷாலின் நண்பர்கள் நந்தா, ரமணா இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர்.

இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரனின் மார்க் ஆண்டனி படத்தில் நடிக்கிறார். வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகும் படம் இது. விஷாலின் எனிமி படத்தை தயாரித்த மினி ஸ்டுடியோஸ் வினோத் இந்தப் படத்தை தயாரிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். கிட்டத்தட்ட பத்து மணிநேரம் மார்க் ஆண்டனி படத்தின் கதையை எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஆதிக் ரவிச்சந்திரன் விவரித்துள்ளார். அதற்குப் பிறகே அவர் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

Also read... தங்கச் சுரங்கப் பின்னணியில் தயாராகும் இரஞ்சித், விக்ரம் படம்..?

இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளனர். விஷாலின் மார்க் ஆன்டணி படத்துக்கு இசை அசுரன் ஜீ.வி.பிரகாஷை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என ஆதிக் ரவிச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Also read... ஜெயம் ரவி படத்துக்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்...!

மோஸ்ட் வான்டட் இசை கேங்ஸ்டர் எனவும் அவரை பாராட்டியிருக்கிறார் ஆதிக். நான் சிவப்பு மனிதனுக்குப் பிறகு மார்க் ஆன்டனி படத்தில் எனதருமை நண்பர் ஜீ.வி.பிரகாசுடன் இணைவதில் மகிழ்ச்சி. எட்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவருடன் பணிபுரிய ஆவலாக இருக்கிறேன் என விஷால் குறிப்பிட்டுள்ளார். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor vishal, GV prakash