ருத்ர தாண்டவம் படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்!

ருத்ர தாண்டவம்

படத்தின் முதல் சிங்கிள் பாடல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை

 • Share this:
  ருத்ர தாண்டவம் படத்தின் முதல் சிங்கிள் பாடலை பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார்.

  திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி தற்போது ருத்ர தாண்டவம் என்ற படத்தை இயக்கி வருகிறார். ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குநர் கெளதம் மேனன், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  ருத்ர தாண்டவம் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. திரெளபதி படத்தைப் போன்று, ருத்ர தாண்டவம் படத்திற்கும் எதிர்ப்பு குரல்களும் எழுகின்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் பாடல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை அதாவது செப்டம்பர் 10-ம் தேதி வெளியாகவிருக்கிறது. 'அம்மாடி' எனத் தொடங்கும் இந்தப் பாடலை பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கு ஜுபின் இசையமைத்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: