முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஜி.வி.பிரகாஷின் ‘பேச்சிலர்’ ஷூட்டிங் முடிந்தது - ரிலீஸ் எப்போது?

ஜி.வி.பிரகாஷின் ‘பேச்சிலர்’ ஷூட்டிங் முடிந்தது - ரிலீஸ் எப்போது?

பேச்சிலர் பட ஸ்டில்

பேச்சிலர் பட ஸ்டில்

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் பேச்சிலர் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

  • Last Updated :

இயக்குநர் சசியிடம் உதவியாளராக பணியாற்றிய சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்யா பாரதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பேச்சிலர்’. இவர்களுடன் இயக்குநர் மிஷ்கின் இந்தப் படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். ஆக்‌சிஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து ‘பேச்சிலர்’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதையடுத்து சென்னை மற்றும் பெங்களூருவில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி முடித்திருக்கும் படக்குழு ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிக்கப்பட்டு 2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவெடுத்தது ஏன்? - அனிதா சம்பத் விளக்கம்

மேலும் படிக்க: கார்த்தி வீட்டில் விரைவில் மீண்டும் குவா குவா சத்தம்... மகிழ்ச்சியில் குடும்பத்தினர்

top videos

    இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பதோடு இசையமைத்தும் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவாளராகவும் , சான் லோகேஷ் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

    First published:

    Tags: Gv praksh kumar, Kollywood