Home /News /entertainment /

ஜி.வி.பிரகாஷின் பென்சில் பட இயக்குநர் மணி நாகராஜ் திடீர் மரணம்

ஜி.வி.பிரகாஷின் பென்சில் பட இயக்குநர் மணி நாகராஜ் திடீர் மரணம்

இயக்குநர் மணி நாகராஜ்

இயக்குநர் மணி நாகராஜ்

பென்சில் திரைப்படத்தின் இயக்குனர் மணி நாகராஜ் மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பென்சில் திரைப்படத்தை இயக்கிய மணி நாகராஜ் மரணமடைந்தார்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மணி நாகராஜ் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பென்சில் என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் வெளியாவதற்கு சில ஆண்டுகள் ஆனாலும், விமர்சன ரீதியில் வெற்றி அடைந்தது.

இதற்குப் பிறகு தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளை கவனித்து வந்தார். அதிலும் மலையாளத்தில் வெளியாகி வெற்றியடைந்த டைமண்ட் நெக்லஸ் மற்றும் Zachariayude Garbhinikal ஆகிய திரைப்படங்களில் தமிழ் ரீமேக் உரிமையை பெற்றிருந்தார். அதில் Zachariayude Garbhinigal படத்தை நீயா நானா கோபிநாத் நடிப்பில் வாசுவின் கர்ப்பிணிகள் என்ற பெயரில் படமாக்கியுள்ளார். அதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெற்றிமாறனின் விடுதலை படத்தில் பிரபல இயக்குநர்?

இந்த நிலையில் இன்று மதியம் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மணி நாகராஜ் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மணி நாகராஜ் திருச்சியை சேந்தவர், அவருக்கு 46 வயதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Shalini C
First published:

Tags: GV prakash

அடுத்த செய்தி