ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் இடிமுழக்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!!

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் இடிமுழக்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!!

இடி முழக்கம் படத்தில் ஜிவி பிரகாஷ் குமார்

இடி முழக்கம் படத்தில் ஜிவி பிரகாஷ் குமார்

Idi Muzhakkam Movie : ஜெயமோகன் எழுதிய கதையை அடிப்படையாக கொண்டு ஆக்சன் திரைப்படமாக இந்த இடி முழக்கம் படம் உருவாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இடி முழக்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமான ஜி.வி. பிரகாஷ், சமீபகாலமாக ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடிக்கும் பெரும்பாலான படங்களில் இசையையும் கவனித்து கொள்கிறார் ஜி.வி. பிரகாஷ்.

தொடர்ந்து கலவை விமர்சனங்களை இவரது படம் பெற்று வந்த நிலையில் சமீபத்தில் வெளியான பேச்சலர் திரைப்படம் பாசிடிவான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து பல படங்களில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் நிலையில் அவற்றில் ஒன்றான சீனு ராமசாமி இயக்கும் இடி முழக்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். சரண்யா பொன்வண்ணன், அருள்தாஸ் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.

Also read... சந்திரமுகி 2-க்கு இசையமைக்கும் பாகுபலி இசையமைப்பாளர்! 

ஜெயமோகன் எழுதிய கதையை அடிப்படையாக கொண்டு ஆக்சன் திரைப்படமாக இந்த இடி முழக்கம் படம் உருவாகியுள்ளது. கலைமகன் முபாரக் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

Also read... பொன்னியின் செல்வன் நாவலை ஏன் சினிமாவாக எடுக்க வேண்டும்? - ஜெயமோகன் 

கையில் ரத்தம் வழியும் கத்தியுடன், எண்ணெய் தேய்த்த தலையுடன் அச்சு அசலாக கிராமத்து இளைஞரைப் போன்று ஃபர்ஸ்ட் லுக்கில் காட்சி அளிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படம் வரும் 24-ம்தேதி திரைக்கு வரவுள்ளது.

First published:

Tags: GV prakash