Vanakkamda Mappilei: டிவி-யில் நேரடியாக வெளியாகும் ஜி.வி.பிரகாஷ் படம்!

வணக்கம்டா மாப்ள

பிக் பாஸ் டேனியல், ஆனந்தராஜ், பிக் பாஸ் ரேஷ்மா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  • Share this:
    ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்திற்கு ‘வணக்கம்டா மாப்ள’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

    இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கும் புதிய பட்த்தில் நடித்து வருகிறார் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ். அவருக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். சன் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தில், பிக் பாஸ் டேனியல், ஆனந்தராஜ், பிக் பாஸ் ரேஷ்மா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்திற்கு ‘வணக்கம்டா மாப்ள’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், முன்னணி தொலைக்காட்சியான சன் டிவி-யின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    டிக் டாக் ஆப்பில் தேனியைச் சேர்ந்த ஒருவர் ‘வணக்கம்டா மாப்ள’ எனச் சொல்வது மக்களிடம் பிரபலமானது. அந்த வார்த்தையே இந்தப் படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: