ஜி.வி.பிரகாஷ் குமார் - கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்துள்ள 13 என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
செல்ஃபி திரைப்படத்தை தொடர்ந்து ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் 13. ஹாரர் வகையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை விவேக் என்ற புதுமுகம் இயக்க நந்தகோபால் தயாரித்து உள்ளார். இதற்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகிறது.
Read More: வியாபாரத்தில் கெத்து காட்டும் தனுஷின் கேப்டன் மில்லர்... எவ்வளவு தெரியுமா?
குமார் - கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் வெளியான செல்ஃபி திரைப்படம் விமர்சன ரீதியில் வெற்றி அடைந்தது. அத்துடன் படம் பார்த்த ரசிகர்களும் செல்ஃபி படத்தை பாராட்டினர்.இதையடுத்து அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் இந்த '13' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று படக்குழுவினர் நம்புகின்றனர்.
My next film #13Teaser for you all !
▶️ https://t.co/EtOVj2VOZW@menongautham @director_vivekk @Madras_Studios @Music_Siddhu @dopmoovendar @jfc_castro @aadhya_prasad @bt_bhavya @adithya_kathir @DoneChannel1 @thinkmusicindia @MadrasDiariesMD
— G.V.Prakash Kumar (@gvprakash) October 20, 2022
இந்நிலையில், 13 படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகியுள்ளது. த்ரில்லர் படமாக அமைந்துள்ள 13 படத்தின் டீசர் பலரையும் கவர்ந்துள்ளது.
இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமான ஜி.வி. பிரகாஷ், சமீபகாலமாக ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடிக்கும் பெரும்பாலான படங்களில் இசையையும் கவனித்து கொள்கிறார் ஜி.வி. பிரகாஷ்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gautham Vasudev Menon, GV prakash