ஜி.வி.பிரகாஷின் கள்வன் படத்தின் டீசரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா.
ஜி.வி.பிரகாஷ், இவானா மற்றும் பிரபல இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் இணைந்து கள்வன் என்ற புதிய படத்தில் நடித்துள்ளனர். இதனை பிவி ஷங்கர் இயக்கியுள்ளார். இயக்குனர் பிவி ஷங்கர் மற்றும் ரமேஷ் ஐயப்பன் இணைந்து கள்வன் படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவையும் இயக்குனரே கையாண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. த்ரில்லர் மற்றும் நகைச்சுவை களத்தில் இப்படம் இயக்கப்பட்டுள்ளது.
நாயகனாக நடிப்பது மட்டுமின்றி, ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையும் அமைக்கிறார். அவருக்கு ஜோடியாக இவானா நடிக்கிறார். இவர்கள் இதற்கு முன்பு பாலா இயக்கிய நாச்சியார் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரியின் ஜி டில்லி பாபு கள்வன் படத்தை தயாரிக்கிறார். படப்பிடிப்பை ஏற்கனவே முடித்துவிட்ட தயாரிப்பாளர்கள், கோடை விடுமுறைக்கு இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
மீண்டும் பி.வாசுவுடன் இணையும் ரஜினிகாந்த்?
Here’s the teaser of #Kalvan Wishing you all happiness! @gvprakash Best wishes Team!
⏩ https://t.co/ObSzCH24rh
— Suriya Sivakumar (@Suriya_offl) January 13, 2023
இதற்கிடையே கள்வன் படத்தின் டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: GV prakash