ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இந்தி நடிகை கங்கனா ரனாவத் படத்தில் இணையும் ஜி.வி.பிரகாஷ்… அறிவிப்பு வெளியீடு

இந்தி நடிகை கங்கனா ரனாவத் படத்தில் இணையும் ஜி.வி.பிரகாஷ்… அறிவிப்பு வெளியீடு

கங்கனா ரனாவத் - ஜி.வி. பிரகாஷ் குமார்

கங்கனா ரனாவத் - ஜி.வி. பிரகாஷ் குமார்

G.V. Prakash Kangana Ranaut : சீனு ராமசாமி இயக்கும் இடி முழக்கம் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடிக்கிறார் ஜி.வி. பிரகாஷ்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துடன் ஒரு புதிய படத்தில் இணைகிறார். இது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் அவர் நடிப்பாரா அல்லது இசையமைப்பாரா என்பது குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

கங்கனா படத்தில் இடம்பெறுது குறித்து ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "மிகவும் திறமையான கங்கனா ரனாவத்தை சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது. அவரது பிரம்மாண்டமான திரைப்படத்தில் பணிபுரிவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க - பார்த்திபன் நடிக்கும் இரவின் நிழல் படத்தின் ரிலீஸ் ஜூலைக்கு ஒத்தி வைப்பு!!

இதற்கு முன்பாக, தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கப்பட்டது. ஏ.எல். விஜய் இயக்கிய இந்த படத்தில், ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா நடித்தார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் தலைவி திரைப்படம் வெளியானது.

தமிழில் மெகா ஹிட்டான சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கிலும் இசையமைக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் அக்சய் குமார் நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழில். அருண் விஜய்யின் யானை படத்திற்கு அவர் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது.

இதையும் படிங்க - விஜய்யின் மாஸ்டர் வசூலை முறியடித்த கமலின் விக்ரம்… வசூல் எவ்வளவு தெரியுமா?

இயக்குனர் பாலாவுடன் சூர்யாவின் படம், கார்த்தியின் சர்தார், தனுஷின் வாத்தி, ராகவா லாரன்ஸின் ருத்ரன், காதலிக்க யாருமில்லை மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யாவின் வாடி வாசல் உள்ளிட்ட படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

சீனு ராமசாமி இயக்கும் இடி முழக்கம் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடிக்கிறார் ஜி.வி. பிரகாஷ்.

First published:

Tags: GV prakash, Kangana Ranaut