ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'எக்ஸாம் பீஸ் கட்டணும்...' டிவிட்டரில் உதவி கேட்ட மாணவிக்கு உடனடியாக G-Pay செய்த ஜிவி பிரகாஷ்!

'எக்ஸாம் பீஸ் கட்டணும்...' டிவிட்டரில் உதவி கேட்ட மாணவிக்கு உடனடியாக G-Pay செய்த ஜிவி பிரகாஷ்!

ஜி.வி. பிரகாஷ்

ஜி.வி. பிரகாஷ்

மாணவி ஒரு ஃபேக் ஐடி என ஜி.வி. பிரகாஷின் ரசிகர்கள் சிலர் சந்தேகம் கிளப்பி வருகின்றனர். இதுதொடர்பான பதிவுகளும், ரீப்ளேயும் அதிகம் காணப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எக்ஸாம் ஃபீஸ் கட்ட வேண்டும் என உதவி கேட்ட மாணவிக்கு, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் உடனடியாக ஜி-பே மூலம் பணம் அனுப்பியுள்ளார். அவரது இந்த செயல் வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகர், இசையமைப்பாளர் என்ற அடையாளங்களைத் தாண்டி தமிழர் நலனுக்காக பல்வேறு தருணங்களில் ஜி.வி.பிரகாஷ் குரல் கொடுத்துள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டங்களின்போது ஜி.வி. பிரகாஷ் ஆர்வம் காட்டியது பாராட்டைப் பெற்றது.

ட்விட்டரில் ஆக்டிவாக இருந்து வரும் ஜி.வி. பிரகாஷிடம், கல்லூரி மாணவி ஹேமப்ரியா உதவி கேட்டுள்ளார். மாணவி தனது ட்விட்டர் பதிவில், ‘ஹாய் சார், நான் ஹேமப்ரியா, கும்பகோணம். நான் பிசிஏ படித்து வருகிறேன். இந்த மாதம் தேர்வு தொடங்குகிறது. அதற்கான ஃபீஸ் கட்ட உதவி செய்யுங்கள்’ என்று கூறியுள்ளார்.

ரசிகர்களை ஈர்க்கும் ராஷ்மிகாவின் போட்டோஸ்!

இதன்பின்னர் மாணவி  சொன்ன ஜி-பே ஃபோன்நம்பருக்கு ஜி.வி. பிரகாஷ் பணத்தை அனுப்பியுள்ளார். இதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஆனால், மாணவி ஒரு ஃபேக் ஐடி என ஜி.வி. பிரகாஷின் ரசிகர்கள் சிலர் சந்தேகம் கிளப்பி வருகின்றனர். இதுதொடர்பான பதிவுகளும், ரீப்ளேயும் அதிகம் காணப்படுகிறது.

உதவியைப் பெற்ற மாணவி ‘உதவியதற்கு நன்றி சார். நாளைக்கு எனக்கு தேர்வு இருக்கிறது. சிறப்பாக வாழ்த்தவும் என்று கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அமித் மிஷ்ராவுக்கும் இதேபோன்ற நிகழ்வு நடந்தது. 2 நாட்களுக்கு முன்பாக அமித்தை ட்விட்டரில் தொடர்பு கொண்ட அவரது ரசிகர், தனது கேர்ள் ஃப்ரெண்டுடன் டேட்டிங் செல்ல வேண்டும். செலவுக்கு ரூ. 300 அனுப்புங்கள் என்று கேட்டுள்ளார்.

இதற்கு ரூ. 500யை அனுப்பியை அமித் மிஷ்ரா அது தொடர்பான ஸ்க்ரீன் ஷாட்டை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு வைரலானது குறிப்பிடத்தக்கது.

Published by:Musthak
First published:

Tags: GV prakash